text
stringlengths
1
15.6k
ரசிகர் மன்றம் (2007 திரைப்படம்)
ரசிகர் மன்றம் (Rasigar Mandram) புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில், 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. வெள்ளையன் தயாரிப்பில், எஸ். பி. பூபதி இசை அமைப்பில், 25 மே 2007 ஆம் தேதி வெளியானது. உமா, கணேஷ் (அறிமுகம்), கோகுல் கிருஷ்ணா (அறிமுகம்), பானு, மன்சூர் அலி கான், பாபு கணேஷ், ஜாகுவார் தங்கம், மதன் பாப், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உமா, கணேஷ் (அறிமுகம்), கோகுல் கிருஷ்ணா (அறிமுகம்), பானு, மன்சூர் அலி கான், பாபு கணேஷ், ஜாகுவார் தங்கம், மதன் பாப், போஸ் வெங்கட், சாய்ரா பாபு, செல்லா, அருள்மணி, ஸ்ரீலதா, தேனீ முருகன், ரகுராஜ், சுஜா வருநீ.
ரமேஷ்காந்த் (மன்சூர் அலி கான்) மற்றும் சத்யா (பாபு கணேஷ்), இருவரும் தமிழ் சினிமாவில் புகழ் பெரும் நடிகர்கள். ரமேஷ்காந்தின் தீவிர ரசிகன் மற்றும் மன்றத்தலைவன் கதிர் (கணேஷ்) ஆவான். சத்யாவின் தீவிர ரசிகன் மற்றும் மன்றத்தலைவன் பாண்டியன் (கோகுல் கிருஷ்ணா) ஆவான். அந்த ஊருக்கும் பள்ளி இசை ஆசிரியையாக வரும் பாரதி (உமா), சினிமா ரசிகர் மன்றம் இருப்பதை கண்டு வியப்படைகிறாள்.
அரசு ஒப்புதலுடன், வெளிநாட்டு நீர் நிறுவனம் ஒன்று அந்த கிராமத்தில் நீர் எடுக்கிறது. இவ்வாறு நீரை எடுத்துவிட்டால் கிராமமே வறண்ட பூமியாக மாறி, நீரில்லாமல் பாலைவனமாக மாறிவிடும் என்று பாரதி ஊர் மக்களுக்கு புரியவைக்க, மக்கள் ஒன்று கூடி அதை எதிர்த்து போராடுகிறார்கள். அதில் இரு ரசிகர் மன்ற உறுப்பினர்களும் இருந்தனர். கதிரையும் பாண்டியனையும் அமைதியாக போராடும்படி கேட்டுக்கொண்டாள் பாரதி. கடந்த காலத்தில், கதிரின் தங்கைக்கும் பாண்டியனுக்கும் நிச்சயமான திருமணம், கதிரும் பாண்டியனும் சண்டையிட்டதால், திருமணம் நின்றுபோனது.
உள்ளூர் அரசியல்வாதி பீதாம்பரத்திற்கு அந்த வெளிநாட்டு நிறுவனம் பணம் தருவதால், அந்த போராட்டத்தை நிறுத்த திட்டம் தீட்டினார். பின்னர், அந்த இரு ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி, சண்டையை தூண்டுகிறார் பீதாம்பரம். கலவரத்திற்கு பின், ரசிகர் மன்றத்திற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்ட அறிவுரை கூறுகிறாள் பாரதி. கதிரும் பாரதியும் ஒருவரையொருவர் விரும்பினர். அவ்வாறாக ஒரு நாள், சத்யாவின் புதுப்பட பூஜைக்கு பாண்டியன் சென்றபொழுது, பாண்டியனின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார். பின்னர், என்னவானது என்பதே மீதிக் கதையுமாகும்.
இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தது எஸ். பி. பூபதி ஆவார். கபிலன், பி. கிருஷ்ணன், கதிர்மொழி மற்றும் பரதன் எழுதிய பாடல்கள் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
சினிமா துறையில் இருக்கும் தவறுகளை காட்டும் படமாக இருந்தாலும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க இயக்குனர் தவறியதாகவும், நல்ல கருத்தை வெளிப்படுத்த முற்பட்டும் பல இடங்களில் இயக்குனர் தோல்வி அடைந்ததாகவும், படத்தின் கதை மந்தமாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்திய மக்களவை தொகுதிகள்
<nowiki></nowiki>இந்திய மக்களவை தொகுதிகள்" (Lok Sabha Contituencies of India) நாடாளுமன்ற தொகுதிகள் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒவ்வொரு மக்களவை உறுப்பினர் வீதம் 543 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது தவிர மேலும் 2 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.
அக்கீயா
அக்கீயா (Achaea) என்பது கிரேக்க நாட்டுக்கு உட்பட்ட ஒரு பிராந்திய அலகு ஆகும். இது கிரேக்கத்தின் தென் பகுதியான பெல பொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பகுதியின் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமான தொழிலாக உள்ளது. இதன் தலைநகராக பட்ராஸ் உள்ளது. இதன் மக்கள்தொகை 2001 இல் முதன்முறையாக 300,000 ஐ தாண்டியது.
குரோதம்
குரோதம் 1982 ஆம் ஆண்டு பிரேம் மேனன் கதை, திரைக்கதையில், ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில், கே. ரங்கராஜன் வசனத்தில், சங்கர் கணேஷ் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். பிரேம் மேனன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2000 ஆவது ஆண்டு பிரேம் மேனன் நடித்து இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகமான குரோதம் 2 வெளியானது.
கட்டிடக்கலை வல்லுனரான பிரேம் (பிரேம் மேனன்) தன் மனைவி இந்து (அஞ்சலி), தங்கை சுபா (சித்ரா) மற்றும் தங்கையின் கணவர் சிவா (ஸ்ரீதர்) ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறான். ஒரு நாள் இந்துவும் சுபாவும் வீட்டில் தனியாக இருக்கும்போது இரண்டு நபர்கள் வீட்டினுள் நுழைந்து சுபாவைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். அவளைக் காப்பாற்ற முயலும் இந்து, அவர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி இறக்கிறாள்.
எதிர்பாராத அசம்பாவிதங்களால் நிலைகுலையும் பிரேம் பணிமாறுதலால் மைசூர் செல்கிறான். அங்கு கவிதா (ராணி பத்மினி) மற்றும் அவளின் தந்தையைச் (கே. ஏ. தங்கவேலு) சந்திக்கிறான். அவர்களுக்கு நல்லதொரு வீட்டைக் கட்டிக்கொடுக்கிறான். இதனால் மனம்மகிழும் கவிதாவின் தந்தை, துப்பாக்கிச் சுடுதலில் திறமையான பிரேமிற்கு ஒரு கைத்துப்பாக்கியை பரிசளிக்கிறார். சென்னைக்குத் திரும்பும் பிரேம் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன் தங்கை சுபாவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ப்ரூக்ளின் நகரில் உள்ள மனநல மருத்துவமனைக்கு சிவாவுடன் அனுப்புகிறான்.
தன் குடும்பம் பாதிக்கப்பட்டது போல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என முடிவு செய்யும் பிரேம், தனக்குப் பரிசாகக் கிடைத்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு இரவில் நகரை உலா வருகிறான். அப்போது தன் எதிரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை சுட்டுக் கொல்கிறான். இதனால் நகரில் குற்றங்கள் குறையத் தொடங்குகிறது. தொடர்ச்சியாக இரவில் மட்டும் குற்றவாளிகளை மட்டும் குறிவைத்துக் கொல்வது யார் என்று காவல்துறை விசாரணையைத் துவக்குகிறது. பிரேம் காவல்துறையிடம் பிடிபட்டரா? என்பது மீதிக்கதை.
இப்படம் "சார்லஸ் பிரான்சன்" நடிப்பில், "மைக்கேல் வின்னர்" இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான "டெத் விஷ்" கதையைத் தழுவி உருவாக்கப்பட்டது.
மேலும் இப்படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து 1985 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தின் கதைக்களமும் இதேபோல் அமைந்தது.
படத்தின் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து மற்றும் உதயணன்.
அகாசி லுயி
அகாசி லுயி ( Louis Agassiz) (1807-1873) என்பவர் சுவிடிய அமெரிக்க உயிரியலாளரும்,புவியியலாளருமாவார். இவர் கடல் உயிரினங்கள் பற்றிய அறிவில் சிறந்தவராக கருதப்படுகிறார். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே விலங்குகள் இயற்கையாக வாழ்வைதப் காண இயலுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர் இடப்பட்டது. கடல் உயிரினங்களின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடம் ஒன்றை தீவு ஒன்றில் அமைத்தார்.
ராதா விஸ்வநாதன்
ராதா விஸ்வநாதன் (Radha Viswanathan) (11 டிசம்பர் 1934 - 2 ஜனவரி 2018) ஒரு இந்திய பாடகர் மற்றும் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். மற்றும் இவரது தாயார் பாரத ரத்னா கருநாடக இசைப் பாடகரான எம்.எஸ்.சுப்புலஷ்மி உடன் பாடியுள்ளார்.
1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று கோபிசெட்டிபாளையத்தில் பிறந்தார். தியாகராஜன் சதாசிவம் மற்றும் அவரது முதல் மனைவியான (பார்வதி எனும்) அபிதகுச்சம்பாளின் மூத்த மகளாவார். இவரது தந்தை, அபிதகுச்சம்பாள் மறைவிற்குப் பின்னர் எம்.எஸ் சுப்புலட்சுமியை,மணந்து கொண்டார். அதனால் இவரை எம். எஸ். சுப்புலட்சுமி வளர்த்து ஆளாக்கினார்.
டி.ஆர் பாலாசுப்ரமணியம் , ராம்நாத் கிருஷ்ணன் மற்றும் மாயவரம் கிருஷ்ண ஐயர் ஆகியோரிடமிருந்து ராதா தனது ஆரம்ப கால இசை பயிற்சியை மேற்கொண்டார். ஐந்து வயதிற்குட்பட்ட வயதில் தன் தாயுடன் இவர் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். வழவூர் ராமையா பிள்ளையிடம், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி ராமச்சந்திரனுடன் சேர்ந்து இவர் முதல் சீடராக இருந்து நாட்டியம் கற்றுத் தேர்ந்தார். மேலும், பரதநாட்டியம் அரங்கேற்தத்தை 1945 ஆம் ஆண்டில் செய்தார். ராதா, மற்றும் ஆனந்தி ஆகிய இருவரும், எம். எஸ். பதங்களைப் பாடும்பொழுது சேர்ந்து நடனமாடுவார்கள் . வயலின் கலைஞர் எகுடி மெனுகினுக்கு , மியூசிக் அகாதெமி, (சென்னை) இசை நிகழ்ச்சியில் ராதா ஒரு பிரத்யேக நடன நிகழ்ச்சியை நடத்தினார்."கனஷியாம் ஆயாரி" என்ற மீரா பஜன் பாடலை எம்.எஸ். பாட, அதற்கு ராதா, மகாத்மா காந்திக்கு முன்னர் பிர்லா மாளிகையில் நடனமாடியுள்ளார். தனது 21 வயதில், ராதா நடனமாடுவதை விட்டு, பாடுவதின் மீது மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தார். விரைவில், எம்.எஸ். கச்சேரிகளில் ராதா ஒரு முக்கிய பாடகராக இருந்தார். எம்.எஸ். மற்றும் ராதா ஆகியோர் முசிறி சுப்பிரமணிய ஐயர் , செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் , மற்றும் கே.வி நாராயணசுவாமி போன்றோரிடம் கீர்த்தனைகளை கற்றுத் தேர்ந்தனர். மற்றும் பதங்களை டி. பிருந்தா விடமிருந்து கற்றனர். மேலும்,பனாரஸ் சித்தேஸ்வரி தேவி மற்றும் திலீப்குமார் ராயிடமிருந்து <nowiki></nowiki> ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையைக் கற்றுக் கொண்டனர்.
அகிச்சத்ரா
அகிச்சத்ரா (Ahichchhatra) என்பது முற் காலத்தில் வட பாஞ்சால நாட்டின் தலைநகராக இருந்தது. கி.பி. 10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டம் ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் பிரித்தானிய இந்திய அரசின் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளமாக இருந்தது தெரியவந்தது. இங்கு கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷானர் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுடுமண் தெய்வ உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகிய முக்கியமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
ஹாப்-லைப் 2
ஹாப்-லைப் 2 (மெருகூட்டப்பட்ட வடிவம் HλLF-LIFE) என்பது வால்வ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தன்மை காட்சிக் கோண துப்பாக்கிச் சூட்டு நிகழ்பட விளையாட்டு ஆகும். இது 1998ம் ஆண்டு வெளிவந்த "ஹாப் லைப்" நிகழ்பட விளையாட்டின் இரண்டாம் பாகம் ஆகும். 2004ம் ஆண்டு வெளியாகிய இவ்விளையாட்டு 40 மில்லியன் டாலர்கள் செலவில் ஐந்து வருடங்கள் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பில் இருக்கும் போதே இதன் பெரும் பகுதி முறையற்ற விதத்தில் இணையத்தில் விநியோகம் செய்யப்பட்டது. இவ்விளையாட்டு வால்வ் நிறுவனத்தின் மாற்றுமிரு தயாரிப்புகளான ஸ்ட்டீம் மென்பொருள் மற்றும் சோர்ஸ் எஞ்சின் ஆகியவற்றுடன் ஒன்றாக வெளியாகியது.
முதல் பாகமான "ஹாப் லைப்" கதை நிறைவடைந்து சில வருடங்களின் பின் நடைபெறும் நிகழ்வுகளாக இவ்விளையாட்டின் கதையம்சம் உள்ளது. ஜி-மேனால் எழுப்பப்பட்ட கதாநாயகன் கோர்டன் பிரீமேன் வேற்றுக்கிரக அரசால் உலகம் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருப்பதைக் காண்கிறார். அலிக்ஸ் வான்ஸ் எனும் போராளியுடன் சேர்ந்து மனித இனத்தை மீட்க பலவித ஆயுதங்களின் உதவியுடன் வேற்றுகிரகவாசிகளோடு போரிடுவதே இவ்விளையாட்டின் கருப்பொருள் ஆகும்.
இவ்விளையாட்டின் வடிவமைப்பு, வரைகலை, அசைவூட்டம், சப்தம், முப்பரிமாண காட்சிகள் போன்றவற்றின் சிறப்பால் மிகச் சிறந்த நிகழ்பட விளையாட்டுக்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. வெவ்வேறு நிகழ்பட வெளியீட்டாளர்களால் வழங்கப்படும் வருடத்தின் சிறந்த நிகழ்பட விளையாட்டு விருதுகள் 39ஐ இவ்விளையாட்டு பெற்றதுடன் 2012ல் நடந்த ஸ்பைக் நிகழ்பட விளையாட்டு விருதுகளில் தசாப்தத்தின் சிறந்த நிகழ்பட விளையாட்டுக்கான விருதையும் தட்டிச் சென்றது. 2011ல் இவ்விளையாட்டு 12 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. "ஹாப்-லைப் 2" இன் தொடர்ச்சிகள் 2006 (முதல் அத்தியாயம்) மற்றும் 2007 (இரண்டாம் அத்தியாயம்) ஆம் ஆண்டுகளில் வெளியாகின.
முதல் பாகத்தைப் போலவே "ஹாப்-லைப் 2"உம் தனி ஒருவர் விளையாடக்கூடிய தன்னிலை பார்வை கோணம் கொண்ட துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு ஆகும். இரு பாகத்திலும் கதாநாயகனின் பெயர் கோர்டன் பிரீமேன் என்பதாகும். கதாநாயகனின் உடல்நிலை, ஆயுதங்கள் போன்றவை முதல் பாகத்தைப் போல் ஒரே மாதிரியாக இருந்தாலும் "ஹாப்-லைப்2"ன் மேம்படுத்தப்பட்ட கணினி வரைகலை முதல் பாகத்திலிருந்து இதை வேறுபடுத்துகிறது. விளையாடுபவர் நிராயுதபாணியாகத் தொடங்கி தனக்குத் தேவையான ஆயுதங்களைத் தேடிப் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது இலக்கு.
திரையில் தோன்றும் பலவிதமான எதிரிகளை எதிர்க்க வெவேறான வழிமுறைகளைப் விளையாடுபவர் பின்பற்ற வேண்டும். சில எதிரிகள் திடீரென பறந்து வந்து தாக்குதல் நடத்துவர்; சில எதிரிகள் கால்நடையாக வந்து தாக்குதல் நடத்துவர். விளையாடுபவர் இவர்கள் அனைவரயும் தான் தேடிப் பெற்ற ஆயுதங்கள் மூலம் வீழ்த்த வேண்டும். சில எதிரிகளை துப்பாக்கி மூலமும் சில எதிரிகளை வெடிகுண்டுகள், புகைக்குண்டுகள் போன்ற ஆயுதங்கள் முலமாகவும் வீழ்த்த வேண்டும். விளையாட்டின் சில பகுதிகளில் கதாநாயகனுக்கு உதவியாக சாரணர்கள், போர் வீரர்கள் ஆகியோர் வருவர்.
விளையாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கதாநாயகனுக்கு ஈர்ப்பு விசை ஆயுதம் கிடைக்கப்பெறும். இதன்மூலம் தூரத்திலுள்ள பொருட்களை அருகே இழுக்கலாம் அல்லது தள்ளலாம். இவ்வாற்றலைக் கொண்டு பிற்பாடு வரும் புதிர்களை விடுவிக்க முடியும்.
இதன் முன்கதை தனியே கூறப்படாது விளையாட்டின் இடையேயும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்திலிருந்தே நாயகன் விளையாடுபவரால் இயக்கப்படுகிறார்.
அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை
அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை (Pan-Americanism) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் இராஜதந்திர, அரசியல், பொருளாதாரத் திட்டங்ங்கள் வழியாக தங்கள் வணிக நலன்களை பேண உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகும்.
அமெரிக்காக் கண்டமானது, வட பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், நடுப் பகுதியில் மெக்சிகோவும், தெற்குப் பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஆகப் பல நாடுகள் சேர்ந்த ஒரு பெரு நிலப்பரப்பைக் கொண்டதாக உள்ளது. இந் நாடுகளெல்லாம் பலவகைக் கொள்கை வேறுபாடுகளைக் கொண்டவையாக உள்ளவைய. என்றலும் இக்கண்டத்து நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால் அது எல்லா நாடுகளின் நலத்திற்கும் ஏற்றதாக இருக்கும் என கருதின. 1889இல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாடானது தனது வாணிப நலன்களை நோக்கமாகக் கொண்டு இந்த ஐக்கிய முயற்சியில் ஈடுபட்ட்து. ஆயினும் லத்தின் அமெரிக்க நாடுகள் இந்த விசயத்தில் அமரிக்க ஐக்கிய நாடுகளை நம்பாததால் இம் முயற்சி எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. 1823இல் மன்ரோ தோற்றுவித்த கொள்கை அமெரிக்காக் கண்டத்தில் பிறர் தலையீட்டைக் கண்டித்ததாயினும் 1904இல் தியடோர் ரூஸ்வெல்ட் இக்கொள்கையிற் செய்தத் திருத்ததால் கரீபியன் கடல் தகராறில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிட முடிந்தது. இதனால் அமெரிக்க ஐக்கிய நாடுகலிடம் தென் அமெரிக்கப் பகையுணர்ச்சி வளர்ந்தது. 1928லிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்ற அமெரிக்க நாடுகளிடம் நட்பு முறையில் நடந்து கொள்ளத் தொடங்கின. அப்போதிலிருந்து அகில அமெரிக்காவும் ஒன்றுபட்டு வெளிநாட்டு விவகாரங்களை நடத்த வேண்டும் என்பது ஒரு கொள்கையாயிற்று. இக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவர வாஷிங்டன், மெக்சிகோ நகரம் ,ரீயோடிஐனெரோ, போனஸ் அயர்ஸ், சான்டியாகோ, ஹவானா, மான்டி, விடியோ முதலிய இடங்களில் பல மாநாடுகள் நடை பெற்றன. இம்மாநாடுகளால் எட்டப்பட்ட கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்த அகில அமெரிக்க ஐக்கியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகமானது வாஷிங்டனில் நிறுவப்பட்டது.
அமெரிக்க நாடுகளிடையே எற்படும் விவகாரங்களைச் அமைதிவழியில் தீர்ப்பதும், பொருளாதார, பண்பாட்டு, சமூக ஒற்றுமையை வளர்ப்பதும் இந்த அமைப்பின் நோக்கங்களாக கூறப்பட்டன.
ரீடா தியாகராஜன்
ரீடா தியாகராஜன் "( Ritha Thiyagarajan)" என்கிற சுசரித்ரா தியாகராஜன் ஜூன் 1984 ஜூன் 10 அன்று பிறந்த "ரீடா" என அறியப்படும் இவர் ஒரு இந்திய பின்னணிப் பாடகர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்றத் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
ரீடா தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். வாழ்க்கையில் ஆரம்பகாலத்தில் அவர் தனது ஐந்து வயதில் பாரம்பரிய கர்நாடக இசையினைப் பயின்றார். அவரது தாயார் லலிதா தியாகராஜன் சென்னையில் ஒரு மூத்த விரிவுரையாளரும் கலைஞரும் ஆவார். அவரது தந்தை பிரபலமான இந்திய நாளேட்டில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் அவர் இந்துஸ்தானி இசையைக் கற்கத் தொடங்கினார். சென்னையில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றார். அவரது சகோதரி பாரம்பரிய கர்நாடக இசை பயிற்சியாளர் மற்றும் வடிவமைப்பு ஆலோசனை வர்த்தக நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.
சென்னை, மைலாப்பூரில் உள்ள "பி.எஸ் சீனியர்" உயர் நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற ரீடா, "ஸ்டெல்லா மாரிஸ்" கல்லூரியில் வடிவமைப்பில் இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, தன் தாயையும் சகோதரியையும் பின்பற்றிச் சென்றார். கல்லூரியில் இருந்த அவர் மற்ற இசைபாணிகளின் மேல் நாட்டம் கொண்டு அதைக் கண்டறிந்து, வணிக ரீதியிலும், மேற்கத்திய பாணியிலும் அதை பரிசோதித்தார். இவர் ஒரு கணிணி வரைகலைஞர் மற்றும் "விஷுலைசர்" மற்றும் "உத்தோபிக்" என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தனிப்பட்ட நிபுணர்களின் வடிவமைப்பு அரங்கத்தின் இணை நிறுவனர் ஆவார்.
ரீடா இசையமைப்பாளர் டி. இம்மானுடன் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். கல்லூரிக்குப் பிறகு ரீடா பதிவு செய்த இசையை கேட்டு அவரிடம் இமான் தொடர்பு கொண்டார். "ஆணை" திரைப்படத்தில் இடம் பெற்ற <nowiki>"எந்தன் வருங்கால வீட்டுக்காரனே"</nowiki> என்ற முதல் பாடலுக்குப் பின்னர் தென்னிந்திய மொழிகளில் 300 பாடல்கள் மற்றும் விளம்பரங்களுக்கும் பாடியுள்ளார். . "வில்லு" படத்தில் "வாடா மாப்பிள்ள" என்ற பாடல் அவருக்கு பெரிய வெற்றியைத் தந்தது. பின்னர் "கந்தசாமி" படத்திற்காக "அலெக்ரா" மற்றும் "மாம்போ மாமியா" என்ற பாடல்களை பாடினார். அவர் "அலெக்ரா" பாடலுக்காக பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது பாடலான "வாடா மாப்பிள்ள" "ரேடியோ மிர்ச்சி" இசை விருதுகளில் ஆண்டின் சிறந்த பாடலை வென்றது. பின்னர் மணிசர்மா இசையில் "அதிதி" படத்தில் "கில்லாடிகோனா", கீரவாணி இசையில் <nowiki>"பஞ்சதாரா பொம்மா பொம்மா"</nowiki> போன்ற பாடல்களுக்காக மீண்டும் "ரேடியோ மிர்ச்சி" ஆண்டின் சிறந்த பாடல் விருது அளித்தது.
ரீடா, இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, மணி ஷர்மா, டி. இம்மான், வித்யாசாகர், தேவி ஸ்ரீ பிரசாத், எம்.ஜெயச்சந்திரன் மற்றும் எம்.எம்கீரவாணி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தார். சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மேடை நிகழ்ச்சிகளிலும் அவர் செயல்படுகிறார்.
கதை (திரைப்படம்)
கதை 2010 ஆம் ஆண்டு அபிஷேக் இயக்கத்தில், ராஜன் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், புதுமுக நடிகர்கள் ஷான் குமார் மற்றும் நிவேதிதா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.
எழுத்தாளர் நரேன் (ஷான்) எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் பரிசினை வெல்கிறார். இந்த விருதை தன் மனைவி காவ்யாவிற்கு (நிவேதிதா) சமர்ப்பிக்கிறார். அத்தம்பதிகளின் கடந்த காலக் கதை சொல்லப்படுகிறது.
நரேன் முதன்முதலில் காவ்யாவை இசையரங்கத்தில் வயலின் இசைக்கருவியை வாசிக்கும் போது காண்கிறான். அவளின் திறமையைப் பாராட்டி தன் வயலின் இசைக்கருவியில் அவளது கையொப்பத்தைக் கேட்டுப் பெறுகிறான். இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். நரேனின் வீட்டுக்கு வரும் காவ்யா அவன் எழுதிய புத்தகங்களுக்காக பெற்ற பரிசுகளைக் கண்டு அவன் ஒரு எழுத்தாளர் என்றறிகிறாள். அப்போது அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறும் நரேனிடம் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இருவரும் காவ்யாவின் பால்ய நண்பனான புஜ்ஜியை (அபிநய்) சந்திக்கின்றனர். நரேன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தைப் படிக்கும் காவ்யாவிற்கு, அப்புத்தகத்தின் கதை தங்கள் இருவரின் வாழ்க்கை பற்றியது என்று புரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அவள் நரேனிடம் அதுகுறித்து கேட்க, அவனோ இது நம் வாழ்க்கை என்பது மற்றவர்களுக்குத் தெரியாது என்றும், மற்றவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு கதை என்றும் கூறுகிறான். அப்புத்தகத்தைத் தொடர்ந்து எழுதும் நரேன் அக்கதையில் வரும் கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்துவதாக எழுதுகிறான். கதையின் எதார்த்தத்திற்காக அவன் உண்மையாகவே காவ்யாவைக் கொடுமை செய்கிறான். காவ்யாவும் கதைக்காக செய்வதாக எண்ணி அவனுக்கு ஒத்துழைப்பு தருகிறாள். அவர்கள் வீட்டிற்கு வரும் புஜ்ஜி, நரேன் கதை என்ற பெயரில் காவ்யாவை செய்யும் கொடுமையைக் காண்கிறான். நரேனின் உண்மையான குணத்தை அறியும் புஜ்ஜியைக் கொல்கிறான் நரேன். நரேனிடமிருந்து காவ்யா தப்பித்தாளா? என்பது மீதிக்கதை.
படத்தின் இசையமைப்பாளர் பவுல் ஜேக்கப்.
சஞ்சனா நடராஜன்
சஞ்சனா நடராஜன் (Sanchana Natarajan) ஒரு இந்திய விளம்பர மற்றும் திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். "இறுதி சுற்று" (2016) மற்றும் "2.0" (2018) உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பாலாஜி மோகனின் வலைத் தொடரில் வெளியான "அஸ் ஐ'ம் சஃபிரிங் ஃப்ரம் காதலில்" (2017) நடித்து புகழடைந்தார்.
சஞ்சனா எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் எடுப்பதற்கு முன்னர் சென்னை அண்ணா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசே பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது, அவர் ஆடைகலன் வடிவமைப்புத் துறையில் ஆர்வம் கொண்டார். மற்றும் விளம்பர நடிகைகள் மற்றும் ஆடைகலன் வடிவமைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு அத்துறையில் தன் அறிவை வளர்த்துக் கொண்டார். இது மாடலிங் மற்றும் நடிப்புக்கான ஒரு உறவை வளர்த்துக் கொள்ள வழிவகுத்தது. சுனில் மேனன், ஸ்ரீனி சுப்பிரமணியன் மற்றும் டூலு உள்ளிட்ட சென்னையில் உள்ள நடன இயக்குநர்கள் மற்றும் ஆடைகலன் வடிவமைப்பாளர்களின் முன்னிலையில் அவர் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். 2012 ஆம் ஆண்டில் மிஸ் தென் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.
2013 இல், ராஜ் டி.வி யின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "தமிழ் பேசும் கதாநாயகியில்" பங்கேற்றார், அதில், சிறந்த தமிழ் பேசும் முன்னணி நடிகைக்கான , முதல் பரிசைப் பெற்றார். இதன் விளைவாக, சஞ்சனாவிற்கு, பாலாஜி சக்திவேலின் "ரா ரா ராஜசேகரில்" ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தயாரிப்பாளர்களான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியின் விளைவாக 2014 ஆம் ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்கிய போதும் இந்த படம் வெளியிடப்படவில்லை. பிறகு, சஞ்சனா லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் "நெருங்கி வா முத்தமிடாதே" (2014) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு அறிமுகமானார், "அவருடைய" குறும் படமான "ஜீபூம்பாவில் பணிபுரிந்தார்" . இந்த சமயத்தில், அவர் ஒரு குத்துச்சண்டை பயிலும் மாணவராக ஒரு சிறிய வேடத்தில் சுதா கொங்கராவின் இருமொழிப் படமான "இறுதிச்சுற்றில்" (2016) நடித்தார். தமிழில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த இந்தத் திரைப்படத்தின் வெற்றி, சுதாவிற்கு தெலுங்கில் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது. அதனால், அடுத்த வருடத்தில் வெங்கடேஷ் நடித்த "குரு" (2017) என்கிற தெலுங்குப் படத்தில் இவருக்கு அதே கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாமா ஸ்ரீநிவாசன்
பாமா ஸ்ரீநிவாசன் "(Bhama Srinivasan)" 1935 ஏப்ரல் 22 அன்று பிறந்த ஒரு கணிதவியலாளராகும் வரையறுக்கப்பட்ட குழுக்களின் பிரதிநிதித்துவ கோட்பாட்டில் அவரது பணி நன்கு அறியப்பட்டது, அவர் 1981 முதல் 1983 வரை கணித பெண்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். 1959 இல் அவர் "மாடுலர் ரெகுலேஷன்ஸ்" மீதான தனது விவாதத்தோடு இயற்பியலில் முனைவர் பட்டத்தை "மான்செஸ்டர்" பல்கலைக் கழகத்தில் பெற்றார்..அவர் தற்போது "சிகாகோ"வில் "இல்லினாய்ஸ்" பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர் ஐந்து முனைவர் பட்டங்களைக் கொண்டிருந்தார். "பால் ஃபோங்" உடன் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவ கோட்பாடு மற்றும் <nowiki>"டெலிங்-லுஸ்ஸிடிக்"</nowiki> கோட்பாடு போன்ற பல ஆவணங்களை அவர் எழுதியுள்ளார்.
ஸ்ரீனிவாசன், இந்தியாவில் சென்னையில் பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் 1954 இல் தனது கலையில் இளங்கலை பட்டம் பெற்றார் மேலும் 1955 அறிவியல் பட்டம் பெற்றார். அவர் முனைவர் பட்ட படிப்பிற்காக இங்கிலாந்திற்கு பயணித்தார். 1960ஆம் ஆண்டு முதல் 1964 வரை "கீலே" பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஒரு விரிவுரையாளராக இங்கிலாந்தில் இருந்தார். அவர் 1965 முதல் 1966 வரை "கனடா"வின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் மூலமாக பிரிட்டிஷ் "கொலம்பியா" பல்கலைக் கழகத்தில் இருந்தார். 1966 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை , மெட்ராஸ் பல்கலைக் கழகத்தின் ராமானுஜன் கணித நிறுவனத்தில் தனது "அல்மா" என்ற கோட்பாட்டை கற்பிப்பதற்கு அவர் இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் ஸ்ரீனிவாசன் ஐக்கிய மாகாணங்களுக்கு குடிபெயர்ந்தார், அங்கு "மாஸசூசெட்ஸி"ல் உள்ள "வர்செஸ்டரில்" உள்ள "கிளார்க்" பல்கலைக்கழகத்தில் ஒரு துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1977 இல், அவர் அமெரிக்காவின் குடிமகனாக ஆனார். அந்த ஆண்டில், அவர் பிரின்ஸ்டனில் உள்ள மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தார். 1980 ஆம் ஆண்டில் "இல்லினாய்ஸ்" பல்கலைக்கழகத்தில் "சிகாகோ" வட்ட வளாகத்தில் கணிதப் பேராசிரியராக தனது பணியை ஆரம்பித்தார்.
2012 இல் அவர் அமெரிக்க கணிதவியல் சங்கத்தின் ஒரு உறுப்பினராக ஆனார். 2017 ஆம் ஆண்டில், கணிதப் பெண்கள் சங்கத்தின் சக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மரியா ரோ வின்சென்ட்
மரியா ரோ வின்சன்ட் "(Mariya Ro Vincent)" ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் குரல் ஏற்பாட்டாளர் ஆவார். ஏ.ஆர்.ரஹ்மான் , ஹாரிஸ் ஜெயராஜ், டி. இம்மான் , விஜய் ஆண்டனி, ஸ்ரீனிவாஸ், அனிருத் ரவிச்சந்தர், எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஜோஷ்வா ஸ்ரீதர் போன்ற சிறந்த இசை இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார். அவரது வெற்றி பாடல்களில் சில கடல் திரைப்படத்தில் இருந்து "அடியே", வணக்கம் சென்னை திரைப்படத்தில் இருந்து "ஹே" போன்றவை அடங்கும். கடல், மரியான், நெடுஞ்சாலை, "மில்லியன் டாலர் ஆர்ம்", யாமிருக்க பயமேன் மற்றும் இது போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் அவரது குரல் ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மலேசியாவில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் ""ஏர்டெல் சூப்பர் சிங்கர்"" மற்றும் "மழவில் மனோரமா"வின் "ஜோஸ்கோ" இந்திய குரல்" மற்றும் மலேசியாவில் உள்ள "ஆஸ்ட்ரோ" தொலைக்காட்சியில் ""சூப்பர் ஸ்டார்"" போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், தயாரிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. "எல் ஃபெ" என்றழைக்கப்படும் குரல் இசைக்குழுவின் முன்னணி பாடகராகவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்.
மரியா ரோஷ்னி வின்சென்ட் சென்னை நகரில் பிறந்தார். இவரது தந்தை திரு லியோ வின்சென்ட், ஒரு பொறியியலாளர் மற்றும் இவரது தாயார் பெயர் திருமதி.அனிதா வின்சென்ட் என்பதாகும். இவரது இளைய சகோதரி மரியான் ரஞ்சினி வின்சென்ட் ஒரு வரைகலை வடிவமைப்பாளர் ஆவார். இவர் குடும்பத்தில் ஒரே தொழில்முறை இசைக்கலைஞர் ஆவார். அவர் "குட் ஷெப்பர்ட் மெட்ரிக்லேஷன்" மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இருந்து இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் "கோலாலம்பூரி"ல் உள்ள சர்வதேச இசைக் கல்லூரி "(ஐ.சி.ஓ.ஓ.எம்)" மற்றும் "பாஸ்டனி"ல் உள்ள "பெர்க்லீ மியூசிக் ஆஃப் மியூசிக்" ஆகியவற்றில் இசையமைப்பில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இவர் லண்டன் "டிரினிட்டி" கல்லூரியில் "பியானோ"வில் 8 வது நிலை முடித்துள்ளார். அவர் "பியானோ" மற்றும் "கிட்டார்" என்ற இசைக் கருவிகளை வாசிக்க நன்கு அரிந்தவர்.
"கச்சேரி ஆரம்பம்" என்ற படத்தில் இசை இயக்குனரான டி. இம்மான் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படத்தில் "கடவுளே" பாடலை இவர் பாடினார். ஏ.ஆர்.ரஹ்மானின் "கே.எம். காலேஜ் ஆப் மியூசிக்"கில் சமகால மேற்கத்திய இசையை பயிற்றுவிப்பாளராக இவர் பணிபுரிந்தார். அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கையிலேயே ஏ. ஆர். ரகுமான் இவரது திறமையைக் கண்டு அவரது "கடல்" படத்தில் "அடியே" என்ற பாடலை பாட ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
பரிவட்டம் (திரைப்படம்)
பரிவட்டம் 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படம் டி.கே.ராஜேந்திரனால் இயக்கப்பட்டது. அய்யனார் சினி ஆர்ட்ஸால் தயாரிக்கப்பட்டது.நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை சுகன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவநேசன் சொக்கலிங்கம் இசை அமைத்துள்ளார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது.
கவிதா கிருஷ்ணன்
கவிதா கிருஷ்ணன் (Kavita Krishnan) அகில இந்திய பெண்கள் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் ஆவார் (AIPWA). மேலும், கிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஐ-எம்எல்), தலைமைக்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அதன் மாதாந்திர வெளியீடான "லிபரேசன்" பத்திரிகையின் ஆசிரியர் ஆவார். இவர் ஒரு பெண்களின் உரிமைகள் ஆர்வலர்; மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினையான, 2012 தில்லி கும்பல் கற்பழிப்பு சம்பவத்தில் நிர்பயா இறந்த போது, பெண்களின் நலனுக்காக எதிர்த்து போராடியவர்.
கவிதா கிருஷ்ணன் தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார். இவர், சத்தீஸ்கர், பிலாய் நகரில் வளர்ந்தார். இவரது தந்தை சத்தீஸ்கரிலுள்ள ஒரு எஃகு ஆலை ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றினார். இவரது தாயிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். கவிதா கிருஷ்ணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுதத்துவமாணி (எம்.பில்.) பட்டம் பெற்றார்.
மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் அருண் ஃபெர்ரீரா தலைமையிலான ஒரு நாடகக் குழுவில் கவிதா கிருஷ்ணன் பங்குபெற்று , தெரு நாடகங்களிலும் எதிர்ப்புக்களிலும் பங்கேற்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபோது, இவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இவர் தனது முதுகலை பட்டத்தை இப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். 1995 ல் மாணவர் சங்கத்தின் கூட்டு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர், ஆல் இந்தியா ஸ்டூடண்ட்ஸ் அசோசியேசன் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். ஜெ.என்.யூ., மற்றும் ஏ.ஐ.எஸ்.ஏ. வின் உறுப்பினரான மாணவர் தலைவர் சந்திரசேகர் பிரசாத்தை சந்தித்தார். இவர் இன்றும் கூட, ஜெ.என்.யூ. மாணவர்களால் "சந்தூ" என அன்புடன் அழைக்கப்படுகிறார். சந்திரசேகர் சிபிஐ (எம்.எல்) தலைவர் ஷியாம் நாராயண் யாதவுடன் 31 மார்ச் 1997 அன்று பீஹாரில் உள்ள சிவான் என்னுமிடத்தில் நடந்த ஒரு தெருக்கூட்டத்தில் உரையாற்றும் பொழுது கொல்லப்பட்டார். இச் சம்பவம் கவிதா கிருஷ்ணனின் வாழ்க்கையில் தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. கவிதா கிருஷ்ணன் கூட்டு செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் ஜே.என்.யு மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த சந்திரசேகர், இவரை அங்கீகரித்து, பெண்களின் உரிமைகள் குறித்து முழுநேர வேலை செய்யுமாறு பரிந்துரைத்தார். சந்தூவின் படுகொலைக்கு பின்னர், ஆயிரக்கணக்கான ஜே.என்.யூ மாணவர்கள், வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்; முன்னாள் ராஷ்டிரிய ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாகுபூடின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தனர். கவிதா கிருஷ்ணன் தில்லி ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதியாக இருந்தார். அங்கு மாணவர் எதிர்ப்பாளர்கள் பீகார் பவனில் லலூ யாதவ் நபர்களால் தாக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதால் அவர் எட்டு நாட்களை சிறையில் கழித்தார்.
மரபு வழி விழிக் கோளாறு
மரபு வழி விழிக் கோளாறு (ஆங்கிலம்:Coloboma) என்பது விழி அமைப்புகளில் மரபணு மாற்றத்தால் ஏற்படும் குறைபாடுகள் ஆகும். விழிகளின் விழித்திரை, கதிராளி, பார்வைத்தட்டு மற்றும் விழி குழற்படலம் பகுதிகளில் ஓட்டை அல்லது பிளவு ஏற்படும் ஒரு மரபு குறைபாடு ஆகும்.
ராஜேந்திர குமாரி பாஜ்பாயி
ராஜேந்திர குமாரி பாஜ்பாயி (Rajendra Kumari Bajpai) (பெப்ரவரி 8, 1925 - ஜூலை 17, 1999) ஒரு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதியாக இருந்தார், இவர், முன்னாள் இந்திய மந்திரியாகவும் மற்றும் பாண்டிச்சேரியின் முன்னாள் லெப்டினண்ட் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். இவர், 1980, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் சீதாபூரில் தொகுதியிலிருந்து லோக் சபாவுக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.
இவர் பிப்ரவரி 8, 1925 பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்திலுள்ள லாலுசக் என்ற இடத்தில் பண்டிதர் எஸ். கே. மிஸ்ராவிற்குப் பிறந்தார். இவர், ரவி ஷங்கர் சுக்லாவின் பேத்தி மற்றும் ஷியாமா சரண் சுக்லாவின் மருமகள் ஆவார். இவர், பள்ளிக்கல்வியினை முடித்த பிறகு, எம். ஏ., மற்றும் பி.ஹச்டி. பட்டங்களை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
இவர், 1947 ஆம் ஆண்டில் ஆசிரியராகப் பணிபுரிந்த டி.என். பாஜ்பாயை திருமணம் செய்துகொண்டார். டி.என். பாஜ்பாயி 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கு பெற்றவர். இத் தம்பதியருக்கு ஒரு மகன் அசோக் பாஜ்பாய் மற்றும் ஒரு மகள் திருமதி. மனீஷா திவேதி ஆகியோர் இருந்தனர்.
இவர், 1962 முதல் 77 வரை உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்; உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இவர் உத்தரப் பிரதேசத்தின் அமைச்சரவையில் 1970முதல் 1977வரை பல துறைகளில் அமைச்சராக இருந்தார். பின்னர், அவர் 1980, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் சீதாபூரில் இருந்து தொடர்ந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், சமூக நல அமைச்சராக 1984முதல் 1986 வரை பணியாற்றினார். 1986-87இல், மாநில அமைச்சராகவும், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பணிபுரிந்தார். 1987முதல் 1989வரை சார்பு பொறுப்பு கொண்ட மாநில அமைச்சராக ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பணியாற்றியுள்ளார். மேலும், இவர் 1995 ஆம் ஆண்டு மே 2 முதல் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி வரை புதுச்சேரியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.
பூரண போளி
பூரண போளி (Puran poli) என்பது ஒரு இந்திய இனிப்பு வகைகளுள் ஒன்றாகும். இது ரொட்டி போன்ற வடிவத்தில் இருக்கும்.
இந்த இனிப்பு வகை ரொட்டிக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வெறு பெயர்கள் உள்ளன. குஜராத்தில், பூரண் போளி அல்லது வேத்மி எனவும், மராத்தியில், பூரன் போலி எனவும், மலையாளம் மற்றும் தமிழில் போளி எனவும், "பக்‌ஷம்" அல்லது பொப்பட்டு அல்லது "ஒலிகா" எனத் தெலுங்கிலும், தெலுங்கானாவில் போலெ எனவும், "ஹொலிஜ்" அல்லது ஒப்பட்டு என [[கன்னடம்|கன்னடத்திலும்], "உப்பட்டி" அல்லது சாதாரணமாக போளி என [[கொங்கணி மொழி|கொங்கணியிலும்]] "அழைக்கப்படுகிறது."
இதன் செய்முறை, பக்‌ஷம் என்கிற தலைப்பில், 14ஆம் நூற்றாண்டு தெலுங்கு கலைக்களஞ்சியமான "மனுசரித்திரா"வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூலைத் தொகுத்தவர் தற்போதுள்ள[[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தைச்]] சேர்ந்த அல்லசானி பெத்தன்னா ஆவார்.
பூரண போளி, [[கொண்டைக் கடலை|கடலைப் பருப்பு,]] மைதா மாவு அல்லது கோதுமை மாவு, [[வெல்லம்]] அல்லது [[சீனி|கரும்பு சர்க்கரை]] , [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]] தூள் மற்றும் / அல்லது [[சாதிக்காய்|ஜாதிக்காய்]] தூள், [[நெய்]] மற்றும் நீர் ஆகியவற்றை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. சில சமயங்களில் [[குசராத்து|குஜராத்தில்]] துவரம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக [[கருநாடகம்|கர்நாடகா]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலும்]] ப்பயன்படுத்தப்படுகிறது. [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] மற்றும் பிற இடங்களில், [[பாசிப் பயறு|பாசிப் பயறு அல்லது பாசிப்பருப்பு]], [[கொண்டைக் கடலை|கொண்டைக்கடலை]] அல்லது இரண்டும் சேர்ந்த கலவையில் தயாரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுகிறது. இதைச் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய அல்லது பயன்படுத்த முடியாத பிற பொருட்களாக கருதப்படுவது கொட்டைகள், பேரீச்சம்பழங்கள், மற்றும் மஞ்சள் தூள் போன்றவை ஆகும்.
இதன் ஊட்டச்சத்து மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக, நாம் பூரண போளி செய்யத் தேவையான பொருட்களைப் பார்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டபடி, முக்கிய பொருட்களாக கடலைப்பருப்பு, கோதுமை (மைதா) மாவு, வெல்லம் அல்லது சர்க்கரை போன்றவை உள்ளன.
1. கடலைப்பருப்பு : இது [[புரதம்|புரதத்தின்]] முக்கிய ஆதாரமாக உள்ளது. இதில் [[நார்ப்பொருள் (உணவு)|"ஃபைபர்"]] சத்து உள்ளதால், [[கொலஸ்டிரால்|"கொலஸ்ட்ராலை"க்]] குறைக்க உதவுகிறது, மேலும் [[துத்தநாகம்]], [[இலைக்காடி|"ஃபோலேட்"]] மற்றும் [[கல்சியம்|"கால்சியம்"]] ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கடலைப்பருப்பிற்குப் பதிலாக, துவரம் பருப்பை பயன்படுத்தலாம் ஏனெனில் இதுவும் "சன்னா"வைப் போன்ற பண்புகளை கொண்டுள்ளது.
2. கோதுமை மாவு, வெல்லம் அல்லது சர்க்கரை: இவை [[கார்போவைதரேட்டு|"கார்போஹைட்ரேட்டின்"]] முக்கிய ஆதாரங்கள்.
[[பகுப்பு:இந்திய உணவுகள்]]
[[பகுப்பு:இந்திய இனிப்பு உணவுகள்]]
[[பகுப்பு:தமிழர் சமையல்]]
[[பகுப்பு:மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்]]
தளிகொத்தனூர்
தளிகொத்தனூர் (Thalikothanur) என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், தேன்கனிக்கோட்டை இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 666 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,769 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,419, பெண்களின் எண்ணிக்கை 1,350 என உள்ளது.
குழல் மூக்கி
குழல் மூக்கி
குழல் மூக்கி என்னும் நடுத்தர அளவிலான நீண்ட சுழற்சியில் இருக்கும் கடற்பாசிகள். 30 க்கும் அதிகமான இனங்கள் ஷேர்வாடர்கள், கால்னெக்டிஸ் என்ற பிரிவில் உள்ள சில பெரியவை மற்றும் புஃபினஸ் இனத்தில் பல சிறிய இனங்கள் உள்ளன.