news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
2,428,461
2019-12-07T04:45:00+05:30
தமிழகம்
ததும்பும் ஊரணிகள்... மகிழ்ச்சியில் மக்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பொய்த்ததால் ஊரணிகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. வட கிழக்கு பருவ மழை சில ஆண்டுகளாக குறைந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 700 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் ராமநாதபுரம் நகரை ஒட்டிய சோத்துாரணி, அய்யர்மடம் ஊரணிகள் நிறைந்து ததும்புகிறது. தொடர் மழை பெய்தாலும் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சாயக்கார ஊரணி, செம்மங்குண்டு ஊரணி, கிடாவெட்டி ஊரணி உள்ளிட்ட பல ஊரணிகள் நீர் வரத்து கால்வாய்கள் இல்லாததால் நிரம்பாமல் உள்ளன. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால் அனைத்து ஊரணிகளிலும் தண்ணீர் நிறைந்து மக்கள் மனங்களும் மகிழ்ந்திருக்கும்.
2,428,462
2019-12-07T04:46:00+05:30
தமிழகம்
பாலியல் குற்றங்களுக்கு 'புல்லட்' தண்டனை! குமுறித்தீர்க்கின்றனர் கோவை மக்கள்
தெலுங்கானாவில் நேற்று அதிகாலை நடந்த என்கவுன்டரில், நான்கு காம வெறியர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த நிகழ்வு குறித்து, கோவை மக்கள் என்ன சொல்கின்றனர்?நான்கு காமவெறியர்கள் மீது நடத்தப்பட்ட, என்கவுன்டர் மிகவும் சரியான முடிவு. இதே முறையை அனைத்து பாலியல் குற்றங்களிலும், செயல்படுத்தினால் நிரந்தர தீர்வு காண முடியும். பல கனவுகளுடன் அப்பெண்னை வளர்த்த பெற்றோருக்கு, நீதி கிடைத்து விட்டது. -அபிராமி கல்லுாரி மாணவி2009ல் கோவையில் இரண்டு குழந்தைகள் சீரழிக்கப்பட்டதில், ஒரு குற்றவாளி இது போல் என்கவுன்டர் செய்யப்பட்டான்; மற்றொரு குற்றவாளி இன்னும் உயிரோடு இருக்கிறான். பாலியல் குற்றங்களில் இதுபோன்ற தண்டனைகளை, உடனுக்குடன் வழங்க வேண்டியது கட்டாயம்.-விமல்குமார் கல்லுாரி மாணவர்இந்த என்கவுன்டர் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல என்பதே உண்மை. இது போன்ற தண்டனையை, சட்ட ரீதியாக, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவே நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்.-வசுந்தரா கல்லுாரி மாணவி
2,428,463
2019-12-07T04:46:00+05:30
தமிழகம்
மாணவர்களுக்கு பாராட்டு
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் விஷால், துாய்மை இந்தியா திட்டத்தில் மாவட்ட அளவில் நடந்த ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றார். அதே போல் தொண்டி அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவர் முகமது ஆதில் முதலிடமும் பெற்றார்.இவர்களை தலைமை ஆசிரியர் ஐன்ஸ்டீன் பாராட்டினார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சசிக்குமார், நிர்வாகிகள் பகுர்தீன், கண்ணன், கந்தசாமி, அப்பாஸ், ஜெயக்குமார், காஜா உள்ளிட்டோர் பாராட்டினர்.
2,428,464
2019-12-07T04:46:00+05:30
தமிழகம்
நெத்திலி பிரையும் நண்டு சுக்காவும் அப்படி ஒரு டேஸ்ட்டுங்க!
வாரத்தில் ஒருநாள் வீட்டு கிச்சனுக்கு லீவு கொடுத்து விட்டு, சிலர் குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று சூப் முதல் ஐஸ் கிரீம் வரை வெரைட்டியான ஐட்டங்களை ஆர்டர் செய்து, திருப்தியாக சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது போன்ற உணவு பிரியர்களுக்கு, நேரு ஸ்டேடியம், வ.உ.சி., பூங்கா எதிரில் உள்ள, 'டென்மார்க் ரெஸ்டாரன்ட்' நல்ல சாய்ஸ். 600 ரூபாய் பட்ஜெட்டில் ஐந்து பேர் ருசியான அசைவ உணவுகளை ரசித்து, சாப்பிட்டு விட்டு வரலாம். சிக்கன் ஹாட் பெப்பர், சிக்கன் சவர்மா ஸ்பெஷல், கிரில்டு சிக்கன், தந்துாரி கபாப், மீன் பொலிச்சரி எல்லாம் இங்கு கிடைக்கும் சூப்பரான ஐட்டங்கள். அதில் நெத்திலி பிரையும், நண்டு சுக்காவும் அப்படி ஒரு டேஸ்ட். வாடிக்கையாளர் மணிகண்டன், ''நான் வழக்கமாக, கணபதியில் உள்ள டென்மாக்கில் தான் சாப்பிடுவேன். இன்றைக்குதான் இங்கு சாப்பிடுகிறேன். எல்லா ஐட்டங்களும் செம,'' என்கிறார். அப்படி என்னதான் 'செம டேஸ்ட்' என்று, நீங்களும் ஒரு எட்டு போய் ருசித்து பார்க்கலாமே!எங்களுக்கு கோவையில் நான்கு கிளைகள் உள்ளன. உணவு ஐட்டங்களின் சுவையும், ஊழியர்களின் அன்பான உபசரிப்பும்தான்எங்கள் பிளஸ் பாய்ன்ட். டேஸ்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். லாபம், நஷ்டம் எல்லாம் பிறகுதான்.- ரமேஷ் ஓட்டல் இயக்குனர்
2,428,465
2019-12-07T04:47:00+05:30
தமிழகம்
எட்டு ஆண்டுகளுக்கு பின் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் முழு கொள்ளளவு எட்டுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆர்.எஸ்.மங்கலம்:தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இதனால் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் மாவட்டத்தின் நெற் களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்மாயில் தேக்கப்படும் 1,205 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த கண்மாய் 8.93 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதிகளை கொண்டுள்ளதால், பருவ மழையில் மட்டும் நிரம்புவது சாத்தியமற்றது.கண்மாக்கு வடக்கில் சூரியன் கோட்டை ஆறு மூலமும், தெற்கில் வைகை ஆறு அரசடி வண்டல் கீழ் நாட்டார் கால்வாய் மூலமும் கிடைக்கும் உபரி நீர் மூலமே கண்மாய் முழு கொள்ளளவான 6 அடியை எட்டும் சாத்தியம் உள்ளது. இந்நிலையில் பருவ மழையால் தற்போது கண்மாயில் பாதி அளவான 3 அடி தண்ணீர் மட்டுமே நிரம்பியுள்ளது. இன்னும் கண்மாய் முழு கொள்ளவை எட்ட 3 அடி தண்ணீர் தேவை. கடந்த 2011 க்கு பிறகு இந்த ஆண்டு முழு கொள்ளளவான 6 அடியை எட்டுவதற்கு சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் வைகையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை இந்த கண்மாய்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
2,428,466
2019-12-07T04:47:00+05:30
தமிழகம்
போலீஸ் அருங்காட்சியகத்தில் போர் விமானம் பார்க்கலாம்!
கோவை போலீஸ் அருங்காட்சியகத்தில், போர் பயிற்சி விமானம் பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில், மாநகர போலீஸ் சார்பில் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு காவல்துறை சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்கள், ஆயுதங்கள், கருவிகள், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், கடற்கரை போலீசார் ரோந்து படகு, கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய பீரங்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன.அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்க்க, தினந்தோறும் இலவச அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது, தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படை பயன்படுத்திய, சிறிய ரக போர் பயிற்சி விமானம் கொண்டு வரப்பட்டு, நேற்று பொருத்தப்பட்டது. விரைவில், பொதுமக்கள் பார்வைக்கு, இந்த விமானம் அனுமதிக்கப்பட உள்ளது.இவ்விமானம், இருவர் அமர்ந்து பயணிக்க கூடிய விமானம். இதன் எடை, 1,034 கிலோ. 'இந்துஸ்தான் பிஸ்டன் டிரைனர் - 32' எனும் இவ்விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. நான்கரை மணி நேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பயிற்சி தளங்களிலும், இவ்விமானம் பயன்படுத்தப்பட்டது. 252 லி., கொள்ளளவு கொண்ட எரிபொருள் கொள்கலன் உள்ளது.
2,428,467
2019-12-07T04:48:00+05:30
தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல
பார்க்காமலே விளையாட்டுதன்னம்பிக்கை, விடாமுயற்சி, தனித்திறமை உள்ளிட்ட விஷயங்களில் மாற்றுத்திறனாளிகள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அது விளையாட்டு போட்டியானாலும் சரி. பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி விடுதி மைதானத்தில் இன்று மதியம், 12:00 மணி முதல் நடக்கிறது. பிட்ச் பர்னர்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில் நடக்கும் இப்போட்டியில், தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினரும், பிட்ச் பர்னர்ஸ் கிரிக்கெட் லீக் சிறந்த அணியினரும், பார்வையாளர்களுக்கு தன்னம்பிக்கை பரிசுகளை அளிக்கவுள்ளனர்.படைப்பாளிகளின் 'விருந்து'கோவை வானம்பாடி இலக்கிய இயக்கத்தின், படைப்பாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன். இதுவரை, 30க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி இருக்கிறார்.இவரது படைப்புகள் குறித்த ஆய்வரங்கத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்துகிறது. நாளை காலை, 10:00 மணிக்கு திவ்யோதயா அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், சாகித்ய அகடாமி விருது பெற்ற கவிஞர்கள் சிற்பி, புவியரசு, கவிஞர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் பேச உள்ளனர். இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்நிகழ்ச்சி நல்லதொரு விருந்து.'கி - காங்' பயிலரங்குஉணவு பழக்க வழக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உடல் ஆரோக்கியம், சில சமயங்களில் கேள்விக்குறியாகிறது. உடல் ஆரோக்கியத்தை யோகா, தியானம், உடற்பயிற்சி உட்பட பல்வேறு வழிகளில் பேணலாம். சீனாவின் பழமையான முறைப்படி, தன்னகத்தே உடல் ஆரோக்கியம் பேணும் 'கி - காங்' பயிலரங்கு, 130, டாக்டர் நஞ்சப்பா ரோடு என்ற முகவரியில், இன்று மாலை, 4:00 முதல் 7:00 மணி வரை நடக்கிறது.திருக்குறள் முற்றோதுதல் பயிற்சிராமகிருஷ்ணா ஆஸ்ரமம் மற்றும் திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'திருக்குறள் முற்றோதுதல்' பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாம், சூலுார், பள்ளபாளையம், இருகூர் ரோட்டில் உள்ள, ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் இன்று மாலை, 5:00 முதல் 6:00 மணி வரை நடக்கிறது. ஆஸ்ரமத்தின் செயலாளர் சுவாமி கேசவானந்தா தலைமையில், திருக்குறள் உலகம் கல்விச்சாலை நிறுவனர் கணேசன் பயிற்சி அளிக்கிறார்.யோகாசன போட்டிராயல் ரைடர்ஸ் யோகா மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான யோகாசன போட்டி, காளப்பட்டியில் உள்ள, தி ஐடியல் மவுன்ட் லிடெரா ஜீ பள்ளி வளாகத்தில் இன்று காலை, 8:00 மணி முதல் நடக்கிறது. எல்.கே.ஜி., குழந்தைகள் முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்று, தாங்கள் கற்றுள்ள யோகாசனத்தை செய்து காட்டி அசத்துகின்றனர்.பிரீமியம் எக்ஸ்போ!சரவணம்பட்டி புரோசோன் மாலில், 'டர்க் வாய்ஸ்' எனும் பிரீமியம் எக்ஸ்போ இன்றும், நாளையும் நடக்கிறது. காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், நகைகள், கைவினை பொருட்கள், துணி ரகங்கள் என பார்வையாளர்களை கவரும் வகையில் இடம்பெறுகின்றன. பல்வேறு மாநிலத்தவரின் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் ஆபரணங்கள், ஜவுளி ரகங்கள், சேலைகள் பெண்களை ஈர்க்கும் விதத்தில் விற்பனைக்கு இடம்பெறுகின்றன.
2,428,468
2019-12-07T04:48:00+05:30
தமிழகம்
பழைய சொத்துவரியை செலுத்தலாம் நகராட்சி கமிஷனர் தகவல்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் கடந்தாண்டு செலுத்திய பழைய சொத்து வரியை இந்த ஆண்டும் செலுத்தலாம், என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கடந்த 2018 ஏப்.1ல் சொத்து வரி சீராய்வு செய்து வரி உயர்வு செய்யப்பட்டது. நகராட்சி பகுதிகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போது அரசு பழைய சொத்து வரியை செலுத்தலாம், என அறிவித்துள்ளது. சொத்துவரி பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்படுகிறது. ஏப்., முதல் செப்., வரை முதல் அரையாண்டும், அக்., முதல் மார்ச் வரை இரண்டாவது அரையாண்டும் கணக்கிடப்பட்டு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.இது குறித்து நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் கூறியதாவது:ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்டவர்கள் சொத்துவரி சீராய்வுக்கு முன் செலுத்திய பழைய சொத்து வரியை ராமநாதபுரம் நகராட்சியில் செயல்படும் வசூல் மையத்தில் நேரடியாக செலுத்தலாம். நகர் பகுதியில் புதியதாக நிர்ணயிக்கப்பட்ட புதிய வரியை 25 சதவீதத்தினர் செலுத்தியுள்ளனர். ஏற்கனவே கூடுதலாக செலுத்திய சொத்து வரி, அவர்களின் சொத்துவரி கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடு செய்யப்படும்.சொத்து வரியில், பழைய வரியையும், குடிநீர் கட்டணம், மற்ற வரியினங்களையும் பொது மக்கள் வேலை நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை செலுத்தலாம். நகராட்சியில் நலத்திட்டங்களை செயல்படுத்த வரிகளை பொதுமக்கள் முறையாக செலுத்துவது அவசியம், என்றார்.
2,428,469
2019-12-07T04:48:00+05:30
தமிழகம்
யூகோ வங்கியில் சில்லறை கடன் மையம் துவக்கம்
கோவை:யூகோ வங்கி கோவை மண்டலம் சார்பில், சில்லறை கடன் மையம் ஆர்.எஸ்.புரத்தில் துவங்கப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.புரம் விஜய் டவர்சில் உள்ள, மண்டல அலுவலகத்தில், யூகோ வங்கியின் தலைமை அலுவலக 'கிரெடிட் மானிட்டரிங்' துறை பொது மேலாளர் சன்சல் மசும்தார், சில்லறை கடன் மையத்தை துவக்கி வைத்தார். கோவை மண்டல சில்லறை கடன் மைய தலைவர் அந்தோணி அருண் சுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.துணை பொது மேலாளர் நாகரத்னா கூறுகையில், ''தற்போது துவங்கப்பட்டுள்ள சில்லறை கடன் மையம் பிரிவில், கோவையில் உள்ள ஆறு யூகோ வங்கி கிளைகள் செயல்படும். ''வீடு, வாகனம், சொத்து அடமானம், கல்வி, தனி நபர் கடன், யூகோ வாடகை கடன் உள்ளிட்ட கடன்கள் பரிசீலிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படும். மெட்ரோ சிட்டியில் மட்டும் செயல்பட்டு வந்த இம்மையங்கள், தற்போது இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.
2,428,470
2019-12-07T04:49:00+05:30
தமிழகம்
திருவண்ணாமலைக்கு 120 சிறப்பு பஸ்கள்
கோவை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 10ம் தேதி நடக்கிறது. மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை கண்டு தரிசிக்க ஏராளமானோர் திருவண்ணாமலை செல்வது வழக்கம். எனவே, பயணிகள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டத்தில் இருந்து வரும், 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை மண்டலத்தில் இருந்து, 50, திருப்பூரில் இருந்து, 30, ஈரோட்டில் இருந்து, 25, ஊட்டியில் இருந்து, 15 பஸ்கள் என, 120 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2,428,471
2019-12-07T04:49:00+05:30
தமிழகம்
12 அரசு பள்ளிகளை தத்தெடுத்து ரூ. 4.12 கோடியில் கட்டமைப்பு
கோவை:கோவை மாவட்டத்தில், 12 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து, லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எல் அண்டு டி வால்ஸ் நிறுவனங்கள், பல்வேறு கட்டமைப்பு, சுகாதாரம், கல்விசார் செயல்பாடுகள் மேற்கொள்கிறது.நடப்பாண்டில் மட்டும், 4.12 கோடி ரூபாய் மதிப்பில், திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது வரை, ஒத்தக்கால்மண்டபம், பிச்சனுார், வெள்ளலுார் உள்ளிட்ட ஏழு அரசுப்பள்ளிகளுக்கு, வகுப்பறை, கழிவறை புதுப்பித்தல், சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதை, மாணவர்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி, நேற்று, ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஏழு அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஒப்படைப்பு சான்றிதழ்களை பெற்று கொண்டனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசுகையில், ''தனியார் நிறுவனங்கள் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து, வசதிகள் செய்து தருவதை வரவேற்கிறோம். சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம், பல லட்சம் மாணவர்கள் பலனடைகின்றனர். இக்கட்டமைப்பு வசதிகளை, உரிய பள்ளி தலைமையாசிரியர்கள் முறையாக, பராமரிக்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவன தலைவர் பால்வர்கீஸ், எல் அண்டு டி வால்ஸ் தலைவர் பசவராஜப்பா, மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் சிவக்குமார், மூத்த துணை பொது மேலாளர் சங்கரநாராயணன் மற்றும் மேலாளர் சுகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
2,428,472
2019-12-07T04:49:00+05:30
தமிழகம்
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்
சிறப்பு பூஜைஅருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30.வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு, 6:30 மணி.பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.சாஸ்தா ஐயப்பன் கோயில், பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம், சிறப்பு பூஜை, காலை 6:00, மாலை 6:00.சிறப்பு பூஜை, மகா கணபதி கோயில், பனந்தோப்பு, பாம்பன், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜை, பனையடி முனியையா கோயில் வழுதுார், பகல் 12:00 மணி.பொதுதினமலர் நாளிதழ், அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நடத்தும் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக்காட்டுவோம் 2.0, தியாகி முத்துச்சாமி அரங்கம், காமராஜர் நகர் முதல் தெரு, பரமக்குடி. காலை 9:30 முதல் 12:30 மணி வரை. பிளஸ்1, பிளஸ் 2 அனைத்துப்பிரிவு மாணவர் மற்றும் பெற்றோர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். கொடிநாள் வசூல்: துவக்கி வைப்பவர் கலெக்டர் வீரராகவ ராவ், கலெக்டர் முகாம் அலுவலகம், காலை 10:30 மணி, ராமநாதபுரம். இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.
2,428,473
2019-12-07T04:49:00+05:30
தமிழகம்
மண் வளம் பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி
கோவை:உலக மண் தினத்தையொட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நடப்பாண்டு உலக மண் தினத்தையொட்டி, 'மண் அரிப்பை தடுத்து எதிர்காலத்தை காத்தல்' என்பதை அடிப்படையாக கொண்டு, நாடு முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய வேளாண் துறை முடிவு செய்தது.கோவையில் நேற்று நடந்த பேரணியில், மண் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், மண்ணின் தரம், நுண்ணுயிரிகள் மண் அரிப்பை கட்டுப்படுத்துவதற்கும், பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வழிநடத்தினர்.முன்னதாக பேரணியை, பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிர் மேலாண்மை துறை இயக்குனர் கீதாலட்சுமி, பேராசிரியர்கள் கல்யாணசுந்தரம், கென்னடி, ரகுசந்தர் உள்ளிட்டோர் கொடியசைத்து, துவக்கி வைத்தனர்.பேரணி, பல்கலை வளாகத்தில் துவங்கி, மருதமலை சாலை வழியாக சென்று மீண்டும் பல்கலையை அடைந்தது.
2,428,474
2019-12-07T04:50:00+05:30
தமிழகம்
சிறுவாணி ரோட்டில் தீவிர வாகன சோதனை
பேரூர்:பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சிறுவாணி ரோட்டில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கோவையின் மேற்குப்பகுதியில் பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளதால், பேரூர் - சிறுவாணி ரோட்டில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலையில், மாதம்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் என, அடுத்தடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
2,428,475
2019-12-07T04:50:00+05:30
தமிழகம்
எரிவாயு கிணறுக்கு இடம்: ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் இந்திய எரிவாயு நிறுவனம் சார்பில் (ஓ.என்.ஜி.சி) அமைக்கப் படும் எரிவாயு கிணறுகளுக்கும், குழாய்கள் பதிக்கவும் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சப்-கலெக்டர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிறுவன அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.திருப்புல்லாணி பகுதியில் இந்திய எரிவாயு நிறுவனம் சார்பில் இயற்கை எரிவாயு எடுக்க 30 இடங்களில் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. அதில் இருந்து பெறப்படும் எரிவாயுவை துாத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் குழாய்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. எரிவாயு கிணறுகளுக்கும், குழாய் செல்லவும் சுமார் 300 ஏக்கர் நிலம் திருப்புல்லாணி, பெருங்குளம், ரெகுநாதபுரம், காஞ்சிரங்குடி உள்ளிட்ட கிராமங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.அந்த நிலத்து உரிமையாளர்களுக்கான இழப்பீடு வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் கோட்டாட்சியரும், சப்-கலெக்டருமான சுகப்புத்திரா ஏற்பாடு செய்தார். ராமநாதபுரம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எரிவாயு நிறுவன அதிகாரிகள் மற்றும் ரெகுநாதபுரம், திருப்புல்லாணி பகுதியில் நிலம் கொடுத்த விவசாயிகள் 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.எரிவாயு திட்டத்திற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அதை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தியமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.50 கோடிஇழப்பீடு வழங்கப்படவுள்ளது. 2018 ஜன., முதல் வரும் 2020 டிச.,31 வரை இழப்பீடு தொகை வழங்கவும் நிறுவன அதிகாரிகள் சம்மதித்தனர்.மேலும், நிலம் வழங்கிய விவசாயிகள் உள்ள கிராமங்களுக்கு சாலை, மருத்துவம் மற்றும் கல்விக்கூடங்கள் அமைத்துத் தருவது போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தவும் நிறுவன அதிகாரிகள் சம்மதித்துள்ளதாக சப்-கலெக்டர் சுகப்புத்திரா தெரிவித்தார்.
2,428,476
2019-12-07T04:51:00+05:30
தமிழகம்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மகர்நோன்பு பொட்டல் பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 4 பேரை பிடித்து சோதனையிட்டனர். இதில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.போலீசார் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெரு வீரபத்ரன் மகன் ஜான்டேவிட் 19, மஞ்சனமாரியம்மன் கோயில் தெரு கவாஸ்கர் மகன் மனோஜ்குமார் 19, வசந்த நகர் குமரகுருபரன் மகன் வினோத் மணிகண்டன் 20, தாயுமான சுவாமி கோயில் தெரு கருப்பையா மகன் பிரகாஷ் 20, ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2000 ரூபாய், 4 அலைபேசிகள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
2,428,477
2019-12-07T04:52:00+05:30
தமிழகம்
கொசு மருந்து அடிக்க வாங்கியாச்சு 20 இயந்திரம்
கோவை:கோவையில் கொசு புகை மருந்து அடிப்பதற்காக, தலா, ரூ.75 ஆயிரம் மதிப்பில், 20 புதிய இயந்திரங்கள் வாங்கப்பட்டு, மண்டலத்துக்கு நான்கு வீதம் வழங்கப்பட்டுள்ளன.மழை விட்டு, விட்டு பெய்து வருவதால், கோவையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. டெங்கு கொசு உருவாகாமல் இருக்க, மாநகராட்சி குழுவினர் தினமும் கள ஆய்வு செய்து, 'அபேட்' மருந்து தெளிக்கின்றனர். வீதி வீதியாக சென்று கொசு புகை மருந்து அடிக்க, மண்டலத்துக்கு ஒன்று, வெள்ளலுார் குப்பை கிடங்கிற்கு ஒன்று என, ஆறு வாகனங்கள் வாங்கப்பட்டன.கைகளில் துாக்கிச் சென்று அடிக்க, தலா ரூ.75 ஆயிரம் மதிப்பில், 20 இயந்திரங்கள் வாங்கப்பட்டு, மண்டலத்துக்கு நான்கு வீதம் வழங்கப்பட்டுள்ளன. அவை நேற்று பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. ஒவ்வொரு வார்டிலும், மாலை நேரங்களில் வீதி வீதியாகச் சென்று கொசு மருந்து அடிக்க, தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வீடுகள் மற்றும் கம்பெனிகள், கடைகளில் கொசு உருவாவதற்கான புழுக்கள் இருந்தால், வளாகத்தை சுத்தமாக பராமரிக்க அறிவுரை வழங்கி வருகின்றனர்.
2,428,478
2019-12-07T04:53:00+05:30
தமிழகம்
ஜெயிக்கப்போவது நாங்கதான்; மார்தட்டும் மாணவர்கள்! 'தினமலர்' வினாடி-வினா போட்டியில் தெறிக்கும் தன்னம்பிக்கை
கோவை:'தினமலரின் மெகா வினாடி வினா போட்டியில் ஜெயிக்கப்போவது நாங்கள்தான்' என, இப்போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளி மாணவரும் தன்னம்பிக்கையுடன் கூறுகின்றனர். ஜெயிக்கப் போவது எந்த பள்ளியோ!'தினமலர்', கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து, நடத்தும் இந்த மெகா வினாடி வினா போட்டி, நேற்று புலியகுளத்தில் உள்ள ஏ.எல்.ஜி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 200 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'எப்' அணியைச் சேர்ந்த மாளவிகா, சர்வதா ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ராமபிரியா பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியினை ஆசிரியைகள் சுந்தரி, கவுசல்யா, அனிலா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.அன்னை வைலட் பள்ளிஎஸ்.எம்.பாளையத்தில் உள்ள, அன்னை வைலட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 100 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த ஜோஸ்வா, விஜய் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு, அப்பள்ளியின் முதல்வர் அன்புவடிவு, துணை முதல்வர் தேவ இரக்கம் சுஜாதா, பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சியை, ஆசிரியை பானுபிரியா ஒருங்கிணைத்தார்.
2,428,479
2019-12-07T04:53:00+05:30
தமிழகம்
கோவையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
கோவை:டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 43 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு, 114 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகம் முழுவதும், டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி, கோவை அரசு மருத்துவமனையில், கோவை, 21, திருப்பூர், 19, ஈரோடு, 2, திண்டுக்கல் ஒன்று என, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 43 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 31 குழந்தைகள் அடங்குவர். இதேபோல் வைரஸ் காய்ச்சலுக்கு, 114 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2,428,480
2019-12-07T04:54:00+05:30
தமிழகம்
வளர்ச்சி பணியை விரைவில் முடிக்க கலெக்டர் உத்தரவு
கோவை:கோவைகலெக்டர் ராஜாமணி ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, நேற்று ஆய்வுமேற்கொண்டார்.மதுக்கரை பாரதி வீதியில், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வடிகால் அமைக்கும் பணியை நான்கு நாட்களுக்குள் முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியின் அடிப்படை வசதி, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளையும், திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார்.ஆய்வு பணியின் போது, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், உதவி பொறியாளர் ராமசாமி, செயல் அலுவலர்கள் சசிகலா, பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
2,428,481
2019-12-07T04:54:00+05:30
தமிழகம்
வருவாய் மாவட்ட அளவிலானவிளையாட்டு போட்டிகள்
ராமநாதபுரம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி போட்டிகளை துவக்கி வைத்தார். 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடந்தது. வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
2,428,482
2019-12-07T04:55:00+05:30
தமிழகம்
இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)
ஆன்மிகம்மகரஜோதி விழா* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி. வேதபாராயணம் n மாலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி. லட்சார்ச்சனை மகாயக்ஞம் n காலை,6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை. கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை n காலை, 6:45 மணி.* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு. கபிலோபதேசம் n காலை, 7:00 மணி. சிறப்பு பூஜை n மதியம், 2:00 மணி.சுந்தரமூர்த்தி சுவாமிகள் குரு பூஜை விழாவேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n அபிேஷக பூஜை n காலை, 10:00 மணி. அலங்கார பூஜை n காலை, 11:00 மணி.கவுமார மடாலம் வளாகம், சிரவணபுரம், சின்ன வேடம்பட்டி n அபிேஷகம் n காலை, 10:30 மணி. பூஜை, பேரொளி வழிபாடு n மதியம், 11:00 மணி.மண்டல பூஜை* வலம்புரி பால கணபதி கோவில், சக்தி நகர், இ.பி., காலனி, அன்னமநாயக்கர் வீதி, குனியமுத்துார் n காலை, 9:30 மணி.* முத்துமாரியம்மன் கோவில், பஞ்சாயத்து ஆபீஸ் ரோடு, போத்தனுார் n காலை, 9:00 மணி.* பாலமுருகன் கோவில், அம்மாசை கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.அபிேஷகம், அலங்காரம்* அரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.* வேணுகோபாலசுவாமி சன்னதி, மாரியம்மன் கோவில் வளாகம், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 7:00 மணி.* வெங்கடேச பெருமாள் கோவில், சேவூர் ரோடு, மொண்டிபாளையம் n காலை, 5:30 மணி.* திருமலைராய பெருமாள் கோவில், காளிபாளையம், பெரியநாயக்கன்பாளையம் அருகில், வெள்ளமடை n காலை,9:00 மணி.* கோதண்டராமர் கோவில், ராம் நகர் n காலை, 7:00 மணி.* லட்சுமி நரசிம்மர் கோவில், ஒப்பணக்கார வீதி, உக்கடம் n காலை, 7:00 மணி.* கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி n காலை, 9:00 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், ரைஸ் மில் - இடையர்பாளையம் ரோடு, வெள்ளலுார் n காலை, 7:00 மணி.* திருவேங்கடநாதப் பெருமாள் கோவில், சூலுார் n காலை, 9:00 மணி.* நாராயணசுவாமி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, லட்சுமி நாராயணா கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:00 மணி.* கரிவரதராஜ பெருமாள் கோவில், அன்னுார் n காலை, 8:00 மணி. பஜனை பாடல்கள் n மாலை, 6:00 மணி.* வரசித்தி விநாயகர், வரதராஜ பெருமாள், மகாலட்சுமி சுவாமி கோவில், அம்பாள் நகர், சேரன் மாநகர் n காலை, 6:00 மணி.* லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடைவீதி n காலை, 7:00 மணி.* கானியப்ப மசராய பெருமாள் கோவில், பீடம்பள்ளி ரோடு, நாகமநாயக்கன்பாளையம் n மதியம், 12:00 மணி.* ஐயப்பன் கோவில், வெங்கடேசலு நகர், பெரியநாயக்கன்பாளையம். பஜனை பாடல்கள் n மாலை, 6:30 மணி. அன்னதானம் n இரவு, 8:00 மணி.நாராயணீயம்சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 11:00 மணி. விஷ்ணு சகஸ்ரநாமம் n மாலை, 6:30 மணி.விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.பொதுபயிலரங்குநேரு தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளியாபுரம், திருமலையாம்பாளையம் n காலை, 9:45 மணி.திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்என்.ஜி.பி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், காளப்பட்டி ரோடு, நேரு நகர் n காலை, 10:00 மணி.விளக்குகள் கண்காட்சி, விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனைபுனித ஜோசப் சர்ச் வளாகம், போத்தனுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு:ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.விளையாட்டுசைக்கிள் போலோ போட்டிரங்கநாதர் இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரி வளாகம், அத்திபாளையம் n காலை, 9:00 மணி.விளையாட்டு விழாஅவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், பாரதி பார்க் ரோடு, சாய்பாபா காலனி n காலை, 10:00 மணி.மாநில அளவிலான தடகள போட்டிநேரு ஸ்டேடியம், பார்க் கேட், காந்திபுரம் n பிற்பகல், 3:00 மணி.கூடைபந்து போட்டிசர்வஜன மேல்நிலைப்பள்ளி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை,9:00 மணி.யோகாசன போட்டிதி ஐடியல் மவுன்ட் லிடெரா ஜீ பள்ளி வளாகம், காளப்பட்டி n காலை, 8:00 மணி.
2,428,483
2019-12-07T04:55:00+05:30
தமிழகம்
கொசினா ஹில் வியூ சிட்டி புக்கிங் மேளா துவக்கம்
கோவை:பேரூர் பச்சாபாளையத்தில், கொசினா ஹில் வியூ சிட்டியின் புக்கிங் மேளா, இன்றும் நாளையும் நடக்கிறது.கொசினா சங்கத்தினர் கூறியதாவது:பேரூர் பச்சாபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அருகில், இயற்கை சூழலில், கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் சங்க(கொசினா) இன்ஜினியர்களால், கொசினா ஹில் வியூ சிட்டி உருவாக்கப்படுகிறது.இங்கு கட்டுமான பொருட்களின் விபரங்களை, வெளிப்படையாக வைத்து, கட்டுமானப்பணி நடக்கிறது. கட்டுமான தரத்தை, ஒவ்வொரு நிலையிலும் உறுதி செய்ய, இன்ஜினியர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது; வாஸ்து முறையில் கட்டப்பட்டு வருகிறது. 80 சதவீதம் வரை, வங்கி கடன் வசதி பெற்றுத் தருகிறோம். 20 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை வீடுகள் இங்குள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடர்புக்கு, 98653 86610.
2,428,484
2019-12-07T04:55:00+05:30
தமிழகம்
ராமநாதபுரத்தில் 941 பேர் கைது
ராமநாதபுரம்:பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ., மற்றும் த.மு.மு.க., கட்சியினர் 941 பேர் கைது செய்யப்பட்டனர். த.மு.மு.க., மற்றும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சந்தை திடலில் நடந்த த.மு.மு.க., ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது இக்பால் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் சனாவுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த எஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நுார்ஜாவுதீன் தலைமை வகித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 941 பேரை போலீசார் கைது செய்து இரவில் விடுவிக்கப்பட்டனர்.
2,428,485
2019-12-07T04:56:00+05:30
தமிழகம்
எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் ரத்த தானம்
கோவை:கோவையில் எச்.டி.எப்.சி., வங்கி மற்றும் சாந்தி சோசியல் சர்வீஸ் சார்பில், ரத்ததான முகாம் நடந்தது.மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் மில் எதிரில் உள்ள எச்.டி.எப்.சி., கிளையில் நடந்த இந்த ரத்ததான முகாமில், வங்கி, ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் ரத்த தானம் அளித்தனர். வங்கியின் கோவை வட்டார மேலாளர் மோகன்குமார் கூறுகையில், ''பாதுகாப்பான ரத்தம் கிடைக்க செய்வதே இதன் நோக்கமாகும். ரத்தத்தை தானமாக கொடுப்பது மூலம், புற்றுநோய், மாரடைப்பு, நீரழிவு நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வரமால் தடுக்கலாம்'' என்றார்.
2,428,486
2019-12-07T04:56:00+05:30
தமிழகம்
சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் மூன்றாம் இடம்
கோவை:சமீபத்தில் வெளியிடப்பட்ட வனக்காப்பாளர் தேர்வில், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர் மாநில அளவில், மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற ராஜசேகரன் என்ற அந்த மாணவருக்கு, கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் நிர்வாக இயக்குனர் யாஸ்மீ அருண்,மலர்கொத்து கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.ராஜசேகரன் கூறும்போது, ''என்னுடைய வெற்றிக்கு, கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி கொடுத்த பயிற்சியும், ஊக்கமும் முக்கிய காரணம். அகாடமியில்நடத்திய வகுப்புகள், மாதிரி நேர்முகத்தேர்வு போன்றவை, தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தன,'' என்றார்.இப்போது புதிய பாடத்திட்டத்தின்படி, குரூப் 1,2,2ஏ தேர்வுக்கான வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கை நடக்கிறது.
2,428,487
2019-12-07T04:57:00+05:30
தமிழகம்
விமான நிலையத்தில் வேலை வாங்கிதருவதாக ரூ.1.42 லட்சம் மோசடி
ராமநாதபுரம்:திருவாடானை தாலுகா புதுப்பட்டினம் கண்ணன்குடியை சேர்ந்த செல்லையா மகன் சுமோகரன் 22. இவரது அலைபேசிக்கு அக்.15ல் வந்த குறுஞ்செய்தியில் இந்திய விமான நிலையம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக தகவல் வந்துள்ளது. அதன்படி குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்ட சுமோகரன் ரவி என்பவருடன் பேசியுள்ளார். அதன் பின் சுமோகரன் அலைபேசி வங்கி பண பரிவர்த்தனை வழியாக 1 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாயை ரவி உள்ளிட்ட மூன்று பேரின் வங்கி கணக்கிற்கு வெவ்வேறு நாட்களில் அனுப்பியுள்ளார்.ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட ரவி உள்ளிட்ட மூவரும் சுமோகரனுக்கு வேலை வாங்கி தராமல், பணத்தையும் வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். எஸ்.பி., வருண்குமாரிடம் இதுகுறித்து சுமோகரன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரவி, சுனில், சுராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
2,428,488
2019-12-07T04:58:00+05:30
இந்தியா
ஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஐதாரபாத் : தெலுங்கானா மாநிலத்தில் சம்ஷாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண் மருத்துவரை இரவு பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி தொழிலாளர்கள் நான்கு பேர் அவரிடம் வந்து உதவுவது போல் நடித்து அருகில் உள்ள மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்தனர்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் சம்பவ இடத்தி்ற்கு போலீசார் அழைத்துச்சென்ற போது தப்பியோட முயன்ற நான்கு பேரையும் சுட்டுக்கொன்றனர். அவர்களின் உடல் மெகபூபா நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.
2,428,489
2019-12-07T04:58:00+05:30
தமிழகம்
வனவிலங்கு கணக்கெடுப்பு: முதுமலையில் நேற்று துவக்கம்
கூடலுார்:முதுமலை உள்வட்ட பகுதியில், வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.முதுமலை புலிகள் காப்பக வெளி வட்டம் பகுதியில், பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள், கடந்த, 23ல் துவக்கி, 29ம் தேதி நிறைவு பெற்றது.தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, முதுமலை உள் வட்ட வன பகுதியில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று, காலை, 6:30 துவங்கியது. இதற்காக முதுமலை, தெப்பகாடு, கார்குடி, நெலாக்கோட்டை வனச்சரகங்கள், 29 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, துணை இயக்குனர் செண்பகபிரியா மேற்பார்வையில், வனச்சரகர்கள் சிவகுமார், தலைமையில், பிரிவுக்கு தலா மூன்று அல்லது நான்கு வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பணியின் போது வன விலங்குகள், மரங்கள், தாவரங்கள் குறித்த விபரங்களை 'டேட்டா' சீட்டுகள், மொபைல் ஆப்களில் பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகள், 11ம் தேதி நிறைவு பெறுகிறது.வனத்துறையினர் கூறுகையில்,'வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வந்தாலும், சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி, யானை சவாரி வழக்கம் போல் நடைபெறும். நாளை (இன்று) முதல் வெளிவட்ட பகுதியிலும்; ஜன., 10ம் தேதி முதல் உள்வட்ட பகுதியிலும் தானியங்கி கேமராக்கள் பதிவுகள் மூலம், தலா, 25 நாட்களுக்கு வன விலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடக்கும்,' என்றனர்.
2,428,490
2019-12-07T04:59:00+05:30
தமிழகம்
காட்டு பன்றிகள் கூட்டம்: மக்கள் நடமாட அச்சம்
குன்னுார்:குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதியில் உலா வரும் காட்டு பன்றிகளால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில், நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்ட நிலையில், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் குப்பைகளை தேடி காட்டு பன்றிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் நடந்து செல்ல மிகவும் அச்சப்பபடுகின்றனர்.இப்பகுதி சேர்ந்த ராஜேஷ் கூறுகையில்,''கடந்த பல ஆண்டுகளாக காட்டு பன்றிகளின் தொல்லை இருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இங்கு பன்றி கடித்து பெண் காயமடைந்த நிலையில் தற்போது வெளியில் நடந்து செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். வனத்துறைக்கு புகார் தெரிவிக்கப்படும் போது, கண்காணிக்கும் வனத்துறையினர், இவற்றை கூண்டு வைத்து பிடித்து, நிரந்தரமாக வன பகுதிக்குள் விட வேண்டும். குப்பைகளை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
2,428,491
2019-12-07T04:59:00+05:30
தமிழகம்
ஓடும் பஸ்சில் பெண்ணிடம்ரூ.40 ஆயிரம் திருட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சடையன்வலசை பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தனலெட்சுமி 24. நேற்று முன்தினம் ராமநாதபுரம் குமரையாகோவில் அருகில் உள்ள தனியார் வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு அரண்மனை பகுதிக்கு சென்றுவிட்டு டவுன் பஸ்சில் திரும்பியுள்ளார். புது பஸ்ஸ்டாண்ட் பகுதியில் தனது கைப்பையை பார்த்தபோது வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். தனலெட்சுமி புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்
2,428,492
2019-12-07T04:59:00+05:30
தமிழகம்
கூவமூலா பகுதியில் யானைகள் முகாம்:பயிர் சேதம்: முன்னெச்சரிக்கை அவசியம்
பந்தலுார்;பந்தலுார் அருகே, கூவமூலா, அத்திக்குன்னா பகுதிகளில், 17 யானைகள் கொண்ட கூட்டமும், ஒற்றையானையும், முகாமிட்டுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பந்தலுார் அருகே, கூவமூலா பழங்குடியினர் கிராமத்தை ஒட்டிய, மலையில் கடந்த சில நாட்களாக, 17 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது.இந்த யானைகள், கூவமூலா மற்றும் அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவுக்காக சென்று வருகின்றன.பகல் நேரங்களில் புதர்களிலும், இரவு நேரங்களில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து செல்கின்றன. மேலும், ஒற்றையானை கூவமூலா பழங்குடியினர் குடியிருப்புகள், பிற விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.யானைகள் நடமாட்டத்தை வனக்காப்பாளர் லுாயிஸ் தலைமையில், யானை கண்காணிப்பு குழுவை சேர்ந்த அசீஸ், மோகன்ராஜ், கூத்தையன், சேகர், மோகன் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரத்தில் ஒற்றையானை, வீடுகளின் முன்பாக வந்து நிற்பதால், பொதுமக்கள் இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். யானைகள் வந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மாலை, 7:00 மணிக்கு மேல், தனியாக சாலையில் நடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
2,428,493
2019-12-07T05:01:00+05:30
தமிழகம்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
ஊட்டி:ஊட்டியில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.மாவட்ட கல்வி துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் 'சமகிரி சிக்ஷா' என்ற புதிய திட்டத்தில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.ஊட்டி ஜோசப் பள்ளி மைதானத்தில், கால்பந்து போட்டி, எச்.ஏ.டி.பி., மைதானத்தில் வாலிபால் போட்டி, ஏ.டி.சி., காந்திமைதானத்தில் 'கோ கோ' மற்றும் கபடி போட்டிகள் நடந்தது.போட்டி விபரம்:இதில், 19 வயது மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் கீழ்-கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்; கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம்; 17 வயதுக்குட்பட்ட போட்டியில் கீழ்-கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்; தாவனெ அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம்; 17 வயது மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் அதிரகட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றி பெற்றது.*17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் நெலாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடம்; தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம்; 19 வயதுக்குட்பட்ட போட்டியில் எருமாடு, அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம் பிடித்து வெற்றி பெற்றது.*17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்; மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம்; 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்; ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம் பிடித்து வெற்றி பெற்றது.*17 வயது மாணவிகளுக்கான கபடி போட்டியில் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்; எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, 2ம் இடம்; 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, 2 ம் இடம் பிடித்தனர்.*17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 'கோ கோ' போட்டியில் தும்மனட்டி பள்ளி முதலிடம்; எடக்காடு பள்ளி, 2 ம் இடம்; 17 வயது மாணவர்களுக்கான போட்டியில் கக்குச்சி பள்ளி முதலிடம்; எடக்காடு பள்ளி, 2 ம் இடம்; 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் ஊட்டி பள்ளி முதலிடம்; எடக்காடு பள்ளி, 2ம் இடம்.*19 வயது மாணவர்கள், கூடலுார் பள்ளி முதலிடம், தும்மனட்டி பள்ளி, 2 ம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.முன்னதாக போட்டியை, ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.
2,428,494
2019-12-07T05:02:00+05:30
தமிழகம்
முதுகுளத்துாரில் வெள்ளரி விளைச்சல் அமோகம்
முதுகுளத்துார்:முதுகுளத்துார் பகுதியில் வெள்ளரிசாகுபடியில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.முதுகுளத்துார் தாலுகா கீழத்துாவல், கிடாத்திருக்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் செப்.,ல் வெள்ளரிசாகுபடி செய்தனர்.தற்போது பூ விட்டு காய்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.வெள்ளரி செடிகளுக்கு தண்ணீர் பாசனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.கடந்த 20 நாட்களாக அவ்வப்போது பெய்துவரும் மழையால்விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அறுவடைக்கு தயாரான வெள்ளரி சாலைஓரத்தில் உள்ள கடைகளில் கூறு 10 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.கடந்தஆண்டை விட இந்தாண்டு வெள்ளரி விளைச்சல் அதிகம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
2,428,495
2019-12-07T05:02:00+05:30
தமிழகம்
ஓட்டெடுப்பில் ஆதரவு இல்லை: வங்கி துணைத்தலைவர் நீக்கம்
ஊட்டி:ஊட்டி மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆதரவு இல்லாததால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர், துணை தலைவர் உட்பட, 21 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருந்தனர். இதில், துணை தலைவர் பீமன் வங்கி நிர்வாக பணிக்கு எதிராக செயல்பட்டதாக, கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் பழனிசாமிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் பழனிசாமி கூறுகையில், ''துணைத்தலைவர் பீமன் மீது வந்த புகாரை அடுத்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், துணை தலைவர் பீமனை பதவி நீக்க செய்ய கோரி பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்ததை அடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.
2,428,496
2019-12-07T05:02:00+05:30
தமிழகம்
சேற்றில் சிக்கிய குட்டி யானை பலி
கூடலுார்:முதுமலை, மசினகுடி அருகே மரவகண்டி அணையில் குட்டி யானை இறந்து கிடப்பதை, மாலை வன ஊழியர்கள் பார்த்துள்ளனர்.முதுமலை உதவி வன பாதுகாவலர் பெரியசாமி முன்னிலையில், தலைகுந்தா அரசு கால்நடை டாக்டர் ராஜன், பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'தாயுடன், அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த இரண்டு மாத ஆண் குட்டி யானை, சேற்றில் சிக்கி, வெளியே வர முடியாமல் உயிரிழந்தது,' என்றனர்.
2,428,497
2019-12-07T05:03:00+05:30
தமிழகம்
தேயிலை தோட்டம் அழிப்பு சிறிய 'பொக்லைன்' பறிமுதல்
குன்னுார்:குன்னுார் அருகே, அரக்காடு கிராமத்தில் தேயிலை தோட்டத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்திய சிறிய ரக பொக்லைன் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரியில், தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு காட்டேஜ் உட்பட கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குன்னுார் அருகே அரக்காடு கிராமத்தில் அனுமதியின்றி சிறிய பொக்லைன் பயன்படுத்தி தேயிலை தோட்டம் அழித்து வருவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.இதன் பேரில், கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், தாசில்தார் குப்புராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.அதில்,சென்னையை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் நிலத்தில், சிறிய பொக்லைன் இயக்கி வருவதும், 25 சென்ட் நிலம் வரை தேயிலை செடிகள் அகற்றியதும் தெரிய வந்தது.இதை தொடர்ந்து, 'பொக்லைன்' பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,'பசுமை குடில் அமைப்பதாக கூறி, இது போன்று, மாவட்டத்தில், தேயிலை விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க, தொடர்ந்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது,' என்றனர்.
2,428,498
2019-12-07T05:03:00+05:30
தமிழகம்
பனை கைவினைஞர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
சாயல்குடி:-மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் சார்பில் பாரம்பரிய தொழில்களுள்ஒன்றான பனை தொழில் சார்ந்த கைவினைஞர்களுக்குபயிற்சியுடன் மேம்படுத்தப்பட்ட உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி தலைமை வகித்தார்.பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகரன் முன்னிலை வகித்தார்.அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ் வரவேற்றார்.கடலாடி முனியசாமி பாண்டியன், நகர் செயலாளர் ஜெயபாண்டியன், சாயல்குடி கூட்டுறவு சங்கத் தலைவர்செந்துார் பாண்டியன், பனைவெல்ல கூட்டுறவு சங்க உதவி இயக்குநர் அன்புச்செழியன், கன்னிராஜபுரம்தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நவ.,21 முதல் 25 வரை 5 நாட்கள் பயற்சி முடித்த 100 பேருக்கு தலா 15 ஆயிரம் வீதம் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலானபாளை அரிவாள்,பதனீர் காய்ச்சும் பாத்திரம்,கேன்கள்,மர கொட்டாச்சி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.தனி அலுவலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
2,428,499
2019-12-07T05:04:00+05:30
தமிழகம்
'பிளாஸ்டிக்' பறிமுதல்: ரூ.42 ஆயிரம் அபராதம்
ஊட்டி:மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தடை செய்யப்பட்ட, 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரியில், நான்கு நகராட்சி, 11 பேரூராட்சி மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய, நான்கு மண்டலங்களில், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்களின் உபயோகம், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது குறித்து திடீர் ஆய்வு நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, துணை கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் திடீர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்கள் குறித்து ஆய்வு நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட, 10 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு, 42 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
2,428,500
2019-12-07T05:04:00+05:30
தமிழகம்
போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊட்டி:ஊட்டியில், போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் உள்ள இரண்டு கிளைகளில், 140 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.டிரைவர், கண்டக்டர் மற்றும் டெக்னிக்கல் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பல ஊழியர்கள் பணிக்கு வந்தும், முறையாக விடுமுறை எடுத்தும் கூட, பலருக்கு 'ஆப்சென்ட்' போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நிர்வாகத்திடம் கேட்டால், முறையாக பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்து, அரசு போக்குவரத்து கழக நுழைவு வாயிலில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.பி.எல்., தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலாளர் சையத் இப்ராஹிம், துணை பொது செயலாளர் கணேசன், ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் ஜெபஸ்டீன் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து துறை ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
2,428,501
2019-12-07T05:05:00+05:30
தமிழகம்
தடை மீறி ஆர்ப்பாட்டம்: த.மு.மு.க.,வினர் கைது
ஊட்டி:ஊட்டி, ஏ.டி.சி.,யில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி வழங்கவில்லை.இந்நிலையில், நேற்று மதியம், மார்க்கெட் வழியாக , த.மு.மு.க.,வினர் திடீரென கோஷம் எழுப்பியவாறு வந்தனர். டவுன் டி.எஸ்.பி., சரவணன், பி1 இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார், அவர்களை தடுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால், த.மு.மு.க., மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமையில், 100 த.மு.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
2,428,502
2019-12-07T05:06:00+05:30
தமிழகம்
அவலம்:ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் : பயணிகளை பதம் பார்க்கும் பள்ளங்கள்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் தவிக்கும் நிலையில், ரோடு குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்துள்ளதால் பயணிகளின் கால்களை பதம் பார்க்கும் அவல நிலை உள்ளது.ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட்டிற்கு தினமும் 800 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு குடிநீர், கழிப்பறை, சுகாதார வசதிகள் இன்றி பயணிகள் தவிக்கின்றனர். தற்போது பஸ்ஸ்டாண்ட் உள் பகுதியில் ரோடு படு மோசமாக உள்ளது. குண்டும், குழியுமாக இருப்பதோடு கற்கள் மேலே தெரியும் வகையில் இருப்பதால் பயணிகள் கால் இடறி காயம் அடைகின்றனர். மெகா பள்ளங்களால் பஸ்கள் இயக்க முடியாமல் டிரைவர்கள் தவிக்கின்றனர்.மழை நேரங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்லும் போது பயணிகள் மீது சேற்றை வாரி இறைக்கிறது. மழை நேரங்களில் பயணிகள் காத்திருப்பதற்கு போதுமான இட வசதியில்லை. மழையால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிநிற்க கூட முடியாத நிலை உள்ளது. பஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஆதரவற்றவர்கள் பயணிகள் இடத்தை ஆக்கிரமித்துபடுத்துக்கொள்கின்றனர். பயணிகள் நிலை கேள்விக்குறியாக உள்ளது. பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.இதனால் பஸ்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. கழிவு நீர் செல்வதற்கு தேங்குவ தால் எப்போதும் துார் நாற்றம் வீசுகிறது. இலவச கழிப்பறை, சிறு நீர் பிறை எதுவும் அமைக்கப் பட வில்லை. திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன காப்பகத்தில் மழை நீர் தேங்கி வாகனங்கள் நிறுத்த முடியாத அளவில் உள்ளது. முழுவதுமாக கழிவு நீர் வெளியேறுவதால் வாகனங்களை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இரவுநேரங்களில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் பயணிகள் தவிக்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் புதிய தளம் அமைக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வேண்டும்.
2,428,503
2019-12-07T05:07:00+05:30
தமிழகம்
பி.ஏ.பி., கால்வாயில் நேரடியாக கொட்டுவதால் கலங்கடிக்கும் கழிவுகள்!
உடுமலை:பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரமான கால்வாயின் இருகரைகளிலும், நீரிலும், பிளாஸ்டிக் உட்பட அனைத்து கழிவுகளையும் கொட்டி, மாசுபடுத்தும் நடவடிக்கைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், பிரதானக்கால்வாயில் இருந்து திருமூர்த்தி நகர் அருகே, உடுமலை கால்வாய் பிரிகிறது. இந்தக்கால்வாய் மூலம், நான்கு மண்டலங்களிலும், 58,292 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது, நான்காம் மண்டல பாசனத்துக்காக இந்த கால்வாயில் தண்ணீர் சென்று வருகிறது.பாசனத்துக்கு தண்ணீர் திறந்ததும், விளைநிலங்களில் நடவு பணிகளை விவசாயிகள் துவக்குவது வழக்கம். ஆனால், உடுமலை கால்வாயில் பாசன வசதி பெறும் விவசாயிகள், ஒவ்வொரு ஷட்டர் மற்றும் மடைக்குச்சென்று, தண்ணீரில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் கழிவுகளையும், கைகளில் தொட முடியாத கழிவுகளையும் அகற்ற வேண்டும். அதையும் தாண்டி, விளைநிலங்களுக்கு, தண்ணீரில் அடித்து வரப்படும் கழிவுகளையும் அவ்வப்போது அகற்றினால் மட்டுமே நடவு பணிகளையே துவக்க முடியும். பொதுப்பணித்துறையினரும், விவசாயிகளோடு இணைந்து, பகிர்மான வாய்க்கால் ஷட்டர் பகுதியில், ஒவ்வொரு சுற்று பாசன திறப்பின் போதும், கழிவுகளை அகற்றிவருகின்றனர்.உடுமலை நகரம் மற்றும் பள்ளபாளையம், போடிபட்டி, கணக்கம்பாளையம் ஆகிய உள்ளாட்சிகளின் எல்லையை ஒட்டி, உடுமலை கால்வாய் செல்கிறது. கால்வாயின்இரு கரைகளையும், குப்பை கொட்டும் இடமாக உள்ளாட்சி அமைப்புகளும், அருகிலுள்ள குடியிருப்பு நிர்வாகத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர்.தீர்வு கிடைக்காமல் கண்ணீர் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் போது, நேரடியாக கால்வாயிலேயே குப்பைகளை கொட்டும் அவலமும் நடக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, குறை தீர் கூட்டங்களிலும், பல ஆண்டுகளாக மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை.குடியிருப்பை ஒட்டி, கால்வாய் கரையில் கம்பி வேலி அமைக்கும் திட்டத்துக்கு பொதுப்பணித்துறையினர் கருத்துரு சமர்ப்பித்தும் அரசு நிதி ஒதுக்கவில்லை. விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.முன்பாக, குப்பை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த தவறை செய்தாலும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரத்துக்கான நீர் மாசுபடுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.
2,428,504
2019-12-07T05:08:00+05:30
தமிழகம்
மழையால் ஒத்திவைக்கப்பட்ட 'கேங்மேன்' தகுதி தேர்வு: வரும் 13 மற்றும் 14ல் நடக்கிறது
உடுமலை:மின் வாரியத்தில், ஒத்திவைக்கப்பட்ட 'கேங்மேன்' பதவிக்கான தகுதி தேர்வு வரும், 13 மற்றும் 14ம் தேதி நடக்கிறது.உடுமலை, பல்லடம், திருப்பூர் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள, 'கேங்மேன்' பதவிக்கு, 2,016 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் உடற்தகுதி தேர்வு, பழநி ரோட்டிலுள்ள உடுமலை துணைமின் நிலைய வளாகத்தில், கடந்த, 2ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர் மழை காரணமாக, 2 மற்றும் 3ம் தேதி, நடக்க இருந்த தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது .4ம் தேதி முதல் அழைக்கப்பட்டிருந்த, விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு, தினமும் நடந்து வருகிறது. இந்நிலையில், 2 மற்றும் 3ம் தேதி, பங்கேற்க இருந்தவர்களுக்கான நேர் காணல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை :உடுமலை, பல்லடம் மற்றும் திருப்பூர் மின் பகிர்மான வட்ட பகுதிகளுக்குட்பட்ட கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு, கடந்த, 2 மற்றும் 3ம் தேதி நடக்க இருந்த உடற்தகுதி தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டது.தற்போது, 2ம் தேதி நடக்க இருந்த உடற்தகுதி தேர்வு, வரும், 13ம் தேதியும், 3ம் தேதி நடக்க இருந்த உடற்தகுதி தேர்வு, 14ம் தேதியும் நடக்கிறது. மேற்படி தேதிகளில் கலந்து கொள்ள வேண்டிய விண்ணப்பதாரர்கள், தற்போது அறிவித்துள்ள மாற்றுத்தேதிகளில், உடுமலை, பழநி ரோடு, உடுமலை துணை மின் நிலைய பகுதியில் வந்து கலந்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2,428,505
2019-12-07T05:08:00+05:30
தமிழகம்
நிலவேம்பு கஷாயம்
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நில வேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை மாசில்லா மேரி தலைமை வகித்தார். ஆசிரியர் கருணாகரன் வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் ராஜா டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ரோட்டரி நிர்வாகிகள் கந்தசாமி, பத்மநாபன், ஜார்ஜ், பாலமுருகன்,தங்கம் பங்கேற்றனர்.
2,428,506
2019-12-07T05:09:00+05:30
தமிழகம்
முள்ளங்கியில் நோய்த்தாக்குதல்கட்டுப்படுத்த முடியாமல் திணறல்
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பல வகையான காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், முள்ளங்கி சாகுபடி பரப்பும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ஜக்கம்பாளையம் சுற்றுப்பகுதியில், நடப்பு சீசனில், பரவலாக முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக செடிகளில், பச்சைப்புழு தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை புழுக்கள் இலைகளை துளையிட்டு, சேதப்படுத்துவதால், மகசூல் பாதிக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: முள்ளங்கி சாகுபடியில் வழக்கமாக நோய்த்தாக்குதல் எதுவும் இருக்காது. ஆனால், நடப்பு சீசனில், பச்சைப்புழு உட்பட பல்வேறு தாக்குதல்கள் காணப்படுகிறது.இவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரியாததால், தனியார் மருந்து கடைகளில், அவர்களது பரிந்துரை அடிப்படையில் மருந்துகளை வாங்கி தெளிக்கிறோம். தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து நோய்த்தடுப்புக்கான வழிகாட்டுதல்களை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
2,428,507
2019-12-07T05:10:00+05:30
தமிழகம்
மழைக்கு வீடுகள் சேதம்
திருவாடானை:திருவாடானை, தொண்டி பகுதியில் நேற்று பெய்த மழைக்கு அடுத்தகுடி குமார், வள்ளி, நெடுமரம் ராக்கம்மாள், புதுப்பையூர்செபஸ்திமுத்து ஆகியோரது ஓட்டு வீடுகள சேதம் அடைந்தன. நிவாரண உதவி கேட்டு கொடுத்த மனுக்கள் மீது திருவாடானை வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
2,428,508
2019-12-07T05:10:00+05:30
தமிழகம்
சேவை மையத்தில் கருவி பழுது:ஆறு மாதமாக வாக்காளர் அவதி
உடுமலை:அரசு இ-சேவை மையங்களில், பிரிண்டர் பழுது காரணமாக, ஆறு மாதமாக வாக்காளர் அடையாள அட்டை எடுக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தம், 'மொபைல் ஆப்' மூலம் போட்டோ, முகவரி உள்ளிட்டவை மாற்றம், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு என, தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.அதே போல், மாநில தேர்தல் கமிஷன் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில், சேர்த்தல், திருத்தம், போட்டோ மாற்றும் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டாலும், தாலுகா அலுவலகங்களிலுள்ள அரசு 'இ-சேவை' மையத்தில் மட்டுமே, புதிய வாக்காளர் அடையாள அட்டை பிரிண்ட் எடுக்க முடியும்.உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களிலுள்ள, இ-சேவை மையங்களுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள், வாக்காளர் அடையாள அட்டைக்கு வருகின்றனர்.ஆனால், இம்மையங்களிலுள்ள பிரிண்டர் பழுதாகி, ஆறு மாதமாகியும் சரிசெய்யப்படாததால், புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுக்க முடியவில்லை. இதனால், பொதுமக்கள் அலைகழிக்கப்படும் நிலை உள்ளது.இ-சேவை மைய அதிகாரிகள் கூறுகையில்,'பிரிண்டர் பழுது காரணமாக, புதிய வாக்காளர் அடையாள அட்டை பிரிண்ட் எடுக்க முடியவில்லை. மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்,' என்றனர்.
2,428,509
2019-12-07T05:12:00+05:30
தமிழகம்
தங்காத்தாள் அம்மன் கும்பாபிேஷகம்
உடுமலை:உடுமலை, ஏரிப்பாளையம் தங்காத்தாள் அம்மன் கோவில், கும்பாபிேஷகம் வரும் 15ம் தேதி நடக்கிறது.உடுமலை, ஏரிப்பாளையத்தில் தங்காத்தாள் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும், 15ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.விழாவிற்கான முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. யாகசாலை பூஜைகள், வரும், 14ம் தேதி நடக்கிறது.அன்று காலை, 9:00க்கு, திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் புறப்பாடு, கணபதி ேஹாமம், விக்கிரகங்களுக்கு அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு, முதற்கால யாக பூஜை நடக்கிறது.வரும், 15ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, 5:30 மணிக்கு மேல், 6:30 மணிக்குள், திருக்குடங்கள் புறப்பாடு, கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.தொடர்ந்து, விநாயகர், பாலமுருகன் மற்றும் தங்காத்தாள் அம்மனுக்கு, மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 7:30க்கு, மகா அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
2,428,510
2019-12-07T05:12:00+05:30
தமிழகம்
வாரச்சந்தை கட்டுமான பணிவிரைந்து முடிக்க கோரிக்கை
உடுமலை:வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டியில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த சிறுவியாபாரிகள் மற்றும் சில விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். சுற்றுப்பகுதி கிராம மக்கள் வரவேற்பால், வியாழக்கிழமையன்று நடக்கும் சந்தையில் வர்த்தகம் களை கட்டியது.போதிய வசதிகளில்லாத சந்தையை மேம்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டது. அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், இடத்தேர்வு குறித்த சர்ச்சை ஏற்பட்டது.இவ்வாறு, பல கட்ட இழுபறிக்குப்பிறகு, வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில், 40 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக வாரச்சந்தைக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.வளாகத்தில், 50 கடைகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை விரைவாக முடித்து, ஏலம் அடிப்படையில், கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சுற்றுப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2,428,511
2019-12-07T05:13:00+05:30
தமிழகம்
மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல்: மடத்துக்குளம் விவசாயிகள் கவலை
மடத்துக்குளம்;மடத்துக்குளம் பகுதியில் சாகுபடி செய்துள்ள, மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் பரவுவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டில், விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பயிராக மக்காச்சோளம் உள்ளது. இங்கு கிணற்றுப்பாசனம் அதிகளவில் உள்ளதால், குறைவான நீர் தேவை உள்ள மக்காச்சோளம் சாகுபடியாகிறது. கடந்த ஆண்டுகளில், வறட்சி ஏற்பட்டதால், விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர்.இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியதால், அணையில் நீர்மட்டம் உயரவும் தாமதம் ஏற்பட்டது. அணையில் போதிய நீர் இருப்பு தேங்கியவுடன், செப்டம்பரில் சம்பா சாகுபடி பாசனத்துக்கு, நீர் திறக்கப்பட்டது. சீரான இடைவெளியில், 45 நாட்கள் புதிய ஆயக்கட்டுக்கும் நீர்வரத்து இருக்கும்.இந்த பாசனநீரை பயன்படுத்தியும், புதிய ஆயக்கட்டு பகுதியிலுள்ள கிணற்று நீரை நம்பியும், 600 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி நடந்துள்ளது. இந்த நிலையில், பல ஏக்கர் பரப்பில் படைப்புழு தாக்குதல் பாதித்துள்ளது.மடத்துக்குளம் அருகேயுள்ள அமராவதி சர்க்கரை ஆலை - செங்கழனிபுதுார் ரோட்டில், கிளை வாய்க்கால் பகுதியில் சாகுபடி செய்து, மூன்று மாதம் வளர்ந்த பயிரில் இந்த புழுக்களின் தாக்கம் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'படைப்புழு தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. அறுவடை நெருங்கும் நேரத்தில், இதுபோல் பாதிப்பு மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. இதற்கு, வேளாண்மைத்துறையினர் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்,' என்றனர்.வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறுகையில், '' படைபுழு தாக்கிய விளைநிலங்களை ஆய்வு செய்து, பயிர்களைக்காக்க, தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படும்,'' என்றார்.
2,428,512
2019-12-07T05:14:00+05:30
தமிழகம்
மேல்நிலை மாணவருக்கு 'சக்சஸ் மந்த்ரா' தினமலர் நடத்தும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி பரமக்குடியில் இன்று காலை 9:30 முதல் 12:30 வரை
ராமநாதபுரம்:பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தை எதிர்கொள்ளும் வெற்றி ரகசியம் கற்றுத் தரும் தினமலர் நாளிதழின் 'சக்சஸ் மந்த்ரா'-ஜெயித்துக் காட்டுவோம் 2.0 வழிகாட்டுதல் நிகழ்ச்சி பரமக்குடி தியாகி முத்துச்சாமி அரங்கத்தில் இன்று (டிச.,7) காலை 9:30 முதல் பகல் 12:30 மணி வரை நடக்கிறது.தினமலர் நாளிதழ் 'ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும்,' நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் ஆதரவை பெற்று வருகிறது. தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள 'சக்சஸ் மந்த்ரா'- ஜெயித்துக்காட்டுவோம் 2.0 எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது.புதிய பாடத்திட்டம் தயாரித்த வல்லுநர் குழு, அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களை கொண்டு புதிய பாடத்திட்டத்தை எப்படி அணுகலாம். அதில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர்., கோடு, அதை பயன்படுத்தும் வழிமுறை மற்றும் பொதுத்தேர்வு நடக்கும் விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.மாணவர்களுக்கு வாய்ப்பு: நுழைவுத் தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டத்தை பயன்படுத்துவது எப்படி, மனப்பாடம் செய்யாமல் புரிந்துகொள்வது எப்படி, பாடங்களை சுவாரஸ்யமாக படிப்பது எப்படி, 'கிரியேட்டிவ்' சிந்தனைகளை வளர்ப்பது எப்படி, தேர்வுக்கு முன் உடல் மற்றும் மனதை தயார்படுத்துவது எப்படி, கற்றதை தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்துவது எப்படி என்பதற்கு இந்நிகழ்ச்சியில் விடை கிடைக்கும்.அனுமதி இலவசம்: மேல்நிலை வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்கலாம். பங்கேற்போருக்கு முக்கிய குறிப்புகள், வினாக்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்படுகிறது.
2,428,513
2019-12-07T05:20:00+05:30
தமிழகம்
திறக்குமா மூன்றாம் கண்:இருந்தும் இல்லாத நிலையில் 'கேமரா'க்கள் ;பழுதுகளை சரிசெய்யாது அலட்சிய போக்கு
ராஜபாளையம்:தவறு செய்பவர்களை கண்டு பிடிப்பதற்காக நாள் முழுவதும் காவல் காக்கும் 'சிசிடிவி' கேமரா பொது மக்களுக்கும் போலீசாருக்கும்வரப்பிரசாதமாக இருந்து வரும் நிலையில் பல இடங்களில் அதிகாரிகளின் அலட்சியத்தால் செயல்படாததை விரைந்து சரி செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளும் புதிதாக உருவாகிவருகிறது. இவை அனைத்தையும் கண்காணிப்புவளையத்திற்குள் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத விஷயம். இதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை புதிது புதிதாகஉருவாகி வரும் குற்ற செயல்கள் என பல்வேறு காரணிகள் உள்ளன.இவற்றிற்கு மாற்று ஏற்பாடாக சாத்தியமான பகுதிகளில் எல்லாம் மூன்றாவது கண்எனப்படும் கண்காணிப்பு கேமரா பொருத்தி வருகின்றனர்.வெளிநாடுகளில் எப்போதோ வந்து விட்ட இது தற்போது தான் இங்கு சூடு பிடிக்க துவங்கி உள்ளது. தவறு செய்தால் கேமராவில் சிக்குவோம் என்ற பயமேகுற்ற செயல்களை வெகுவாக குறைத்து வருகிறது.குடித்து விட்டு வேகமாக ரேஸ் செல்லுதல் என இளைஞர்கள் சிலர் மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது வழக்கமாகிவிட்டது.இது தவிர குற்ற செயல் புரிபவர்கள், விதி மீறலில் ஈடுபடுவோர், செயின் பறிப்பு, விபத்து ஏற்படுத்துவோர் உள்ளிட்டவர் களைகட்டுப்படுத்தும் போலீசாரின் பணியும் சுலபமாகி வருகிறது இருந்தாலும் பல்வேறு பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டும் பழுதால்முழுமையாக செயல்படுவதில்லை. அவற்றை சரி சரிசெய்வதும் இல்லை.இதையும் செயல்படுத்த சம்பந்தபட்டவர்கள் முன் வர வேண்டும்.
2,428,514
2019-12-07T05:21:00+05:30
தமிழகம்
வாசிப்பை நேசிக்க நூலகங்களில் வசதியில்லை! போட்டித்தேர்வுகளுக்கு தயாராக போராட்டம்
உடுமலை:உடுமலை பகுதி கிராமங்களிலுள்ள, நுாலகங்களை தரம் உயர்த்தி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், கிராமப்புற மாணவர்களும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களும் பயன்பெறுவார்கள்.உடுமலை பகுதியில், அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு உட்பட காரணங்களால், கல்வியறிவு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், அரசுப்பணிக்காக, போட்டித்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு, போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உட்பட கிராமப்புறங்களில் அனைத்து தரப்பினருக்கும் நுாலகங்கள் பல்வேறு வகையில் உதவி வருகின்றன. ஆனால், அங்கு கட்டமைப்பு வசதிகள் போதியளவு மேம்படுத்தப்படாமல், வாசகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.செல்லப்பம்பாளையம், சின்னவீரம்பட்டி, தேவனுார்புதுார், உட்பட ஊர்ப்புற நுாலகங்கள் பல ஆண்டுகளாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.காலை, 9:00 மணி முதல், 12:00 வரையும், மாலை, 4:00 மணி முதல், 6:30 வரை மட்டுமே இந்நுாலகங்கள் செயல்படும். இந்த நுாலகங்களை கிளை நுாலகமாக தரம் உயர்த்தி, கட்டடம் உட்பட அனைத்து வசதிகளையும் மேம்படுத்த, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.ஊர்ப்புற நுாலகங்கள் பெரும்பாலும், சொந்தக்கட்டடத்தில் இயங்கி வந்தாலும், தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இப்பகுதியில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் உடுமலை நுாலகத்திற்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.தளி, ஜல்லிபட்டி, வாளவாடி, பூளவாடி ஆகிய கிளை நுாலகங்கள் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தப்பட்டும், குறிப்புதவி பகுதிக்கு தனியாக கட்டடம் இல்லை. வாளவாடி, ராவணாபுரம், போடிபட்டி ஆகிய நுாலகங்களில் கூடுதல் கட்டடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழு மூலம் நுாலகங்கள் மேம்பாட்டிற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,428,516
2019-12-07T05:21:00+05:30
தமிழகம்
விளையாட்டு வீரருக்கு வேலை வாய்ப்பு 
உடுமலை:தமிழக தபால் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் போஸ்ட்மேன், 'மல்டி டாஸ்கிங்' உட்பட, 231 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.வில் வித்தை, தடகளம், சதுரங்கம், ஹாக்கி, நீச்சல், மல்யுத்தம், டென்னிஸ், கேரம் உள்ளிட்ட, 42 விதமான விளையாட்டுகளில் சாதனை படைத்தவர்கள் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர், 18 முதல், 27 வயது உடையவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தகுதி அவசியம். அடிப்படை கணினி அறிவு தேவை. விருப்பம், தகுதி உள்ளவர், ரூ.100 கட்டணம் செலுத்தி டிச., 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல், விவரங்களை www.indiapost.gov இணையதளங்களில் அறியலாம்.
2,428,517
2019-12-07T05:22:00+05:30
தமிழகம்
ரோட்டை கடக்க நடைமேம்பாலம் :பஸ் ஸ்டாண்ட் அருகே பணிகள் தீவிரம்
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நடை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், கோர்ட், தனியார் மருத்துவமனைகள், பிரதான கடை வீதிகளான, கல்பனா ரோடு, லதாங்கி தியேட்டர் ரோடு, சீனிவாசா வீதி உள்ளிட்ட ரோடுகளுக்கு செல்லவும், வணிக வளாகங்கள், செல்லவும், பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து, திண்டுக்கல் -பழநி தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது.மணிக்கு, நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டை கடக்கும் நிலையில், தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, ரோட்டை கடப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதோடு, விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாண்ட் அருகே, பழநி- பொள்ளாச்சி ரோட்டின் குறுக்கே, 1.5 கோடி ரூபாய் செலவில் 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த, மார்ச் மாதம் துவங்கியது.ரோட்டில் இருபுறமும், நடை மேம்பாலத்திற்காக, பில்லர்கள் அமைக்க குழி தோண்டி, கம்பிகள் கட்டப்பட்டது. நடை மேம்பாலத்திற்காக, பெரிய அளவிலான இரும்புத்துாண்கள், நிறுவப்பட்டது. தற்போது, படிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படிகள் மற்றும் 'லிப்ட்' ஆகியவை அமைக்கப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2,428,518
2019-12-07T05:23:00+05:30
தமிழகம்
மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்க 'வாட்ஸ் ஆப்' குழு
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க 'வாட்ஸ் ஆப்' குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் பிரசவ நேர தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடித்தாலும் இறப்பு விகிதத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. \குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு முறையாக சிகிச்சை பெறாததால் பிரசவ நேரத்தில் இறப்பு சம்பவங்கள் தொடர்கிறது. இதை தடுக்க தேசிய சுகாதார திட்டம் முழுவீச்சில் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய 'வாட்ஸ் ஆப்' குழு ஏற்படுத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவர்கள் 11 ஒன்றியங்களின் வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு ஆலோசகராக இடம்பெறுவர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களை பற்றிய முழு அறிக்கை வாட்ஸ் ஆப் வழியாக ஆலோசகராக நியமிக்கப்பட்ட அரசு மருத்துவருக்கு சென்றடையும்.இதன் பின் அப்பெண்ணுக்கு தொடர வேண்டிய சிகிச்சை, உரிய பரிசோதனைகள் குறித்து கர்ப்பிணியின் குடும்பத்திடம் விளக்கப்படும். துவக்க கட்டத்திலே கர்ப்பிணிகளின் உடல்நிலை அறிவதால் பிரசவ நேரத்தில் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. இத்திட்டம் விரைவில் துவங்க உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
2,428,519
2019-12-07T05:23:00+05:30
தமிழகம்
'சிமென்ட்'டே இல்லாமல் கட்டப்பட்ட குடிநீர் மேடை! திட்ட துவக்கத்தில் சரிந்ததால் மக்கள் அதிர்ச்சி
உடுமலை:தரமில்லாமல் கட்டப்பட்ட 'சின்டெக்ஸ்' குடிநீர் தொட்டி, திட்டம் துவக்கத்தின் போது, அடித்தள மேடையோடு சாய்ந்ததால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.குடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் ஊராட்சிக்குட்பட்ட தோட்டத்து சாலைகள் குடிநீர் தேவைக்கு, சிறப்புத்திட்டம் தேவை என, அப்பகுதியினர் வலியுறுத்தினர். இதையடுத்து, ஒன்றிய பொது நிதியில், திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது.அதன்படி, பைப்லைன் அமைப்பு, விஸ்தரிப்பு மற்றும் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி அமைக்க, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒப்பந்ததாரர் மூலம் பணிகள், மேற்கொள்ளப்பட்டன. நீண்ட இழுபறிக்குப்பிறகு, திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தொட்டிக்கு குடிநீர் ஏற்ற, பைப்லைனில் தண்ணீர் திறக்கப்பட்டது. சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்ப துவங்கியதும், தொட்டி வைக்கப்பட்டுள்ள, கான்கீரிட் மேடை அப்படியே இடிந்து விழுந்தது.குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வந்தனர். அப்போது, 'ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தும், மண், கற்களை கொண்டு, தொட்டி மேடையை கட்டியுள்ளனர். படுமோசமான நிலையில் அரசு நிதியை மொத்தமாக 'சுருட்டும்' வகையில் மேடை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிக்க தவறிய ஒன்றிய பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல், 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு திட்ட பணியின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்,' அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குடிமங்கலம் பி.டி.ஓ., ெஷல்டன் கூறியதாவது: அக்கிராம மக்கள் அளித்த புகார் அடிப்படையில், குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை பெதப்பம்பட்டியை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாண்டியன் மேற்கொண்டார். அவருக்கு அளிக்க வேண்டிய தொகை நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தரமாக, அரசு விதிகளின்படி, மீண்டும் திட்ட பணிகளை முழுமையாக செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பணிகள் நாளை (இன்று) துவங்கும்.தரம் இல்லாமல், அரசு திட்டப்பணிளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, கூறினார்.
2,428,520
2019-12-07T05:24:00+05:30
தமிழகம்
வெங்காயம் விலை கடும் உயர்வு
உடுமலை:உடுமலையில் வரத்து குறைவு காரணமாக, சின்ன வெங்காயம் மற்றும் பெல்லாரி வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.உடுமலை பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.பருவ மழை மற்றும் அழுகல், வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக, சின்ன வெங்காயம் சாகுபடி பெருமளவு குறைந்தது.ஒரு சில இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயமும், மழையால் கடுமையாக பாதித்தது.இந்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை காரணமாக, பெல்லாரி வெங்காயம் வரத்தும் பெருமளவு குறைந்தது.உடுமலை சந்தைக்கு, சின்ன வெங்காயம் மற்றும் பெல்லாரி வரத்து குறைந்ததால், விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.நேற்று சந்தையில், சின்ன வெங்காயம் கிலோ, 150 ரூபாய் வரையும், பெல்லாரி, கிலோ, 200 ரூபாய் வரையும் விற்றது. மொத்த விற்பனையில், 20 ரூபாய் வரை குறைந்து காணப்பட்டது.வியாபாரிகள் கூறியதாவது :உடுமலை சந்தையில், தினமும் சராசரியாக, 10 முதல் 20 டன் வரை வெங்காயம் விற்று வருகிறது. தற்போது வரத்து இல்லாததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இருப்பு வெங்காயம் தரத்திற்கு ஏற்ப, கிலோ, 70 முதல் 130 வரை மொத்த விற்பனை விலையாக உள்ளது.பெல்லாரி வெங்காயம் வரத்து மிகவும் குறைந்துள்ளதால், கிலோ, 200 ரூபாய் வரை விற்று வருகிறது. சிறிய வடிவத்தில் இருக்கும் பெல்லாரி வெங்காயம், ஆந்திரா கும்கூர், கர்நாடக மாநிலம் மைசூரு பகுதியிருந்து வருகிறது. இந்த வகை வெங்காயம், கிலோ, 70 முதல் 90 வரை விற்று வருகிறது.தற்போது, ஒட்டன்சத்திரம் சந்தையிலிருந்து, சின்ன வெங்காயம் வரத்து துவங்கியுள்ளது. புதிய வெங்காயம், 70 முதல், 90 வரை விற்று வருகிறது. சின்ன வெங்காயம் வரத்து துவங்கியுள்ளதால், வரும் வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது.தற்போது உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடை முடிந்ததும், சின்ன வெங்காயம் சாகுபடி துவங்கும். அடுத்த மூன்று மாதத்தில், வரத்து அதிகரிக்கும்.இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.
2,428,521
2019-12-07T05:24:00+05:30
தமிழகம்
அரசு பள்ளி சுற்றுச்சுவரில் புதர்கள் அகற்ற நடவடிக்கை அவசியம்
உடுமலை:உடுமலை அருகே, அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள, புதர்களை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை ஒன்றியம் அந்தியூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. பள்ளியின் பின்புறம், சுற்றுச்சுவரை ஒட்டி, மழை நீர் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடை நீண்ட காலமாக துார்வாரப்படாமல், புதர் மண்டி, அச்சுறுத்தும் வகையில், விஷ ஜந்துக்களின் இருப்பிடமாகவும் உள்ளது. சுற்றுச்சுவர் உயரத்துக்கு புதர் மண்டி காணப்படுவதால், மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்தியூர் ஊராட்சி நிர்வாகம் மாணவர்கள் பாதுகாப்புக்காக உடனடியாக புதர்களை அகற்ற வேண்டும்.
2,428,522
2019-12-07T05:24:00+05:30
தமிழகம்
வழக்கு குறைந்தால் 'டோஸ்' வேதனையில் போலீசார்
ஸ்ரீவில்லிபுத்துார்:மாவட்டத்தில் தினமும் இத்தனை ஹெல்மெட் வழக்குகளை பதிவு செய்யவேண்டுமென உயர் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதால் விருதுநகர் மாவட்ட போலீசார் மனவேதனையில் உள்ளனர்.அதிகரித்து வரும் விபத்துக்களை குறைக்கும் வகையில் டூவீலர் ஓட்டுபவர்கள் அவசியம் ஹெல் மெட் அணியவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.ஒவ்வொரு எஸ்.ஐ.,யும், தினமும் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய நிர்பந்தபடுத்தபடுகின்றனர். போலீசின் அறிவுரையால் ஹெல்மெட் அணிந்து டூவீலர்கள் இயக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் மற்றும் தேதிகளை ஒப்பிட்டு அதே அளவு இருந்தாலோ, அதிகரித்தாலோ உயர் அதிகாரிகள் திட்டுவதில்லை. ஆனால் வழக்குகள் குறைந்து விட்டால் அவர்களுக்கு டோஸ் விழுகிறது. இதனால் போலீசார் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.
2,428,523
2019-12-07T05:25:00+05:30
தமிழகம்
மது அருந்தும் மையமாக கிராம ரோடுகள்: பொதுமக்கள் அச்சம்
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியிலுள்ள ஒதுக்குபுறமான இடங்கள், 'திறந்தவெளி பாராக' பயன்படுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போலீசார் ரோந்து அவசியம் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.மடத்துக்குளம் பகுதியில், 'குடிமகன்'களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பரவி வருகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மது அருந்தியவர்கள், தற்போது, கிராமப்பகுதி மற்றும் ரோட்டின் ஓரங்களை 'திறந்தவெளி பாராக' பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.அமராவதி ஆலை- செங்கழனிபுதுார் ரோடு இரண்டு கி.மீ., நீளம் கொண்டது. இந்த பகுதியில் தோட்டத்து சாளைகள் வசிப்பவர் எண்ணிக்கை அதிகம். இதனால், ரோட்டின் ஓரம் வீடுகள் குறைவாக உள்ளன.இந்த ரோடு ஓரமுள்ள வாய்க்கால் பாலம், தரைமட்டப்பாலம், மரத்தடிகள், அடர்ந்த புதர்களை 'குடிமகன்கள்' திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். இதனால், குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாணவியர் சைக்கிளில் பள்ளிக்குச்சென்று திரும்புகின்றனர். இதர பெண்கள் கடைகள் மற்றும் பலவித தேவைக்கு ரோட்டில் செல்கின்றனர்.விளைநிலங்களுக்கு மத்தியிலுள்ள இந்த பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இந்த ரோட்டின் பல இடங்கள் 'குடிமகன்'களின் திறந்தவெளிபாராக உள்ளது. நீண்ட நேரம் இங்கு அமர்ந்து, ஆபாசமாக கூச்சலிட்டும் நடமாடுகின்றனர். எனவே, இந்த ரோட்டில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவதோடு, மது அருந்துவதை தடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
2,428,524
2019-12-07T05:25:00+05:30
தமிழகம்
பள்ளி கட்டடங்கள் மீது கவனம் செலுத்த அறிவுரை
உடுமலை:மேட்டுப்பாளையம் சம்பவத்தை அடுத்து, அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் பாதுகாப்பை பலப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தொடர் மழை காரணமாக, மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இதுபோன்ற விபத்துகளை பள்ளிகளில் தவிர்க்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறையினர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆய்வு அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தொடர் மழை காரணமாக பள்ளிகளின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்று சுவரில் இருந்து, 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.மழை காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின், அதனை பாதுகாப்பாக பூட்டி வைப்பது நல்லது. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகள் உறுதியாக உள்ளதா என்பதை அடிக்கடி ஆய்வு செய்வது அவசியம். மேற்கூரையில் நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2,428,525
2019-12-07T05:25:00+05:30
தமிழகம்
ஆனியன்தோசை 'கட் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்:வெங்காயவிலை உயர்வின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்துார் ஓட்டல்களில் ஆனியன்ரோஸ்ட், ஆனியன் ஊத்தாப்பம், மசாலாதோசைகள் கட் செய்யபட்டுள்ளது. பிரியாணிக்கு வழங்கபடும் தயிர் வெங்காயத்திற்கு பதிலாக தயிர்வெள்ளரி வழங்கபடுகிறது. இதனால் வெங்காயபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.50 வரை இருந்தது. தட்டுபாட்டால் தற்போது ரூ.150 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் தாங்கமுடியாத பணசுமைக்கு ஆளாகி உள்ளனர். முன்பு வெங்காயத்துக்கு வாரம் ரூ.15 ஆயிரம் செலவிட்ட நிலையில் இன்று ரூ.45 ஆயிரத்தை தாண்டியதால் மும்மடங்கு செலவீனம் அதிகரித்துள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.இதைதொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்துார் ஓட்டல்களில் ஆனியன்ரோஸ்ட், ஆனியன் ஊத்தப்பம் நிறுத்தபட்டுள்ளது. பிரியாணிக்கு வழங்கும் வெங்காயத்திற்கு பதில் வெள்ளரி போடப்படுகிறது. அதிக விலை கொடுத்தாலும் ஆனியன் ஊத்தாப்பம் கிடைக்காததால் வெங்காயபிரியர்களை ஏாமற்றத்தில் உள்ளனர்
2,428,526
2019-12-07T05:26:00+05:30
தமிழகம்
டாப்சிலிப் முகாமில் மதுரை ஆண்டாள் யானை
ஆனைமலை:மதுரை கள்ளழகர் கோவில் யானை, சேலத்தில் இருந்து பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டது.மதுரை கள்ளழகர் கோவில் பெண் யானை ஆண்டாள். வயது முதிர்வு காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2009ம் ஆண்டு முதல், சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது.பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப்பை சேர்ந்த பாகன் காளியப்பன், 45, யானையை பராமரித்து வந்தார்.இந்நிலையில், கடந்த, 2ம் தேதி வனக்கால்நடை டாக்டர் பிரகாஷ் யானையை பரிசோதனை செய்ய சென்றார். அப்போது, பாகன், டாக்டரை யானை தாக்கியது.டாக்டர் அங்கிருந்து ஓடி தப்பித்தார். யானை அருகே நின்றிருந்த பாகன், யானை மிதித்ததில் பரிதாபமாக இறந்தார்.அந்த யானையை, பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து, லாரி மூலம் ஆண்டாள் யானை, டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதிக்கு அழைத்துவரப்பட்டது.கோவை வனக்கால்நடை டாக்டர் சுகுமார் யானையின் உடல்நிலை குறித்து, நேற்று பரிசோதனை செய்தார். டாப்சிலிப் வனச்சரக அலுவலர் சக்திவேல் மற்றும் வனவர்கள் உடனிருந்தார்.வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறுகையில், ''65 வயதான ஆண்டாள் பெண் யானை, வரகளியாறு பகுதியில் பராமரிக்கப்படும். தற்போது, மருத்துவ பரிசோதனை செய்ததில் யானை ஆரோக்கியமாக உள்ளது தெரியவந்தது. ஆண்டாள் யானையுடன் சேர்த்து டாப்சிலிப் முகாமில் தற்போது, 29 யானைகள் உள்ளன,'' என்றார்.
2,428,527
2019-12-07T05:29:00+05:30
தமிழகம்
லிட்டருக்கு, 6.5 கி.மீ., ஓடும் பஸ்கள்: திருப்பூர் அரசு 'டிப்போ'வில் சாதனை
திருப்பூர்:தமிழக அரசு போக்குவரத்துக்கு கழகத்தில், புதிதாக இயக்கத்துக்கு வந்துள்ள 'பிஎஸ்-4' ரக பஸ்கள், லிட்டருக்கு, 6.52 கி.மீ.க்கும் அதிகமான துாரம் இயங்கி, புதிய இலக்கை எட்டியுள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், அரசு பஸ்கள், ஒரு லி., டீசலுக்கு, ஐந்தரை கி.மீ., துாரம் இயக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டுமென, டிரைவர்களுக்கு அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வகையில், அதிகபட்ச இலக்கை எட்டும் டிரைவர்கள் 'நட்சத்திர டிரைவர்' என்ற பாராட்டையும் பெறுகின்றனர்.திருப்பூர் 'டிப்போ'வில், அதிக அளவு புதிய பஸ்கள் இயக்கப்படுவதால், எரிபொருள் செலவு குறைந்துள்ளது. சராசரியாக, ஒரு லி., டீசலில், அதிகபட்ச துாரத்தில் பஸ்களை இயக்கிய, சாதனை டிரைவர்களுக்கு, தகவல் பலகை வாயிலாக பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.புதிதாக வந்துள்ள பஸ்களின், 'கண்டிஷன்' நன்றாக இருப்பதால், சாதாரணமாக, ஆறு முதல், ஆறரை கி.மீ., துாரத்துக்கு இயக்க முடிவதாக, டிரைவர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பல ஆண்டுகளுக்கு முன் வழங்கிய, பாடாவதி பஸ்களின் நிலை மாறவே இல்லை; 5.50 கி.மீ., என்ற நிலையே தொடர்கிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க, 'பிஎஸ்-4' பஸ்களில், புதிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது. 'ஆக்ஸிலேட்டர்' இயக்கமும் எளிதாக மாறியுள்ளது. இதனால், திருப்பூர் டிப்போவை பொறுத்தவரை, புதிய பஸ்கள், 6.50 கி.மீ., வரை ஓடுகிறது. புதிய பஸ்கள் இயக்கத்தால், போக்குவரத்து கழகத்துக்கான எரிபொருள் செலவு குறையவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
2,428,528
2019-12-07T05:29:00+05:30
தமிழகம்
டெங்கு காய்ச்சலுக்கு இரு குழந்தைகள் பலி
கோவை:டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரு குழந்தைகள் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி சிலுவைபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜின் மகள் ஜெசிந்தா மேரி, 5. கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 3 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல, திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணனின் மகன் தர்ணிஷ், 8. காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி, மேல் சிகிச்சைக்காக கடந்த, 4 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
2,428,529
2019-12-07T05:29:00+05:30
தமிழகம்
ரோட்டை தோண்டியே சகதியாக்கிட்டாங்க புலம்பும் சென்ட்ரல் எக்சைஸ் தெரு மக்கள்
சாத்துார்:சாத்துார் சென்ட்ரல் எக்சைஸ் தெருவில் வணிகவளாகம், நுாற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள், தீப்பெட்டி ஆபிஸ், குச்சிக்கம்பெனிகள், நிப்புக்கம்பெனிகள் உள்ளன. காலை முதல் இரவு வரை வாகன போக்கு வரத்து அதிகமாக உள்ள ரோடாகும். பாதாளசாக்கடைத்திட்டத்திற்காகவும், குடிநீர் பகிர்மானக்குழாய் பதிப்பதற்காகவும் இந்த ரோடு அடிக்கடி தோண்டப்பட்டதால் தற்போது சகதியாக மாறிவிட்டது.வயதானவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ரோட்டை கடக்க சிரமம் படுகின்றனர் . பலர் வழுக்கி விழுகின்றனர். சேற்றில் லாரிகள், வேன்கள் சிக்கி கொள்கின்றன. ஆண், பெண்கள் கழிப்பறை சேதமடைந்த நிலையில் உள்ளது. கதவுகள் உடைந்தும், கழிப்பறையின் கோப்பைகள் பெயர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. தெருவிளக்குகள் வசதியின்றி இரவு நேரத்தில் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் மாலை , இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை உள்ளது. தெருவிளக்கு அமைப்பதுடன் பாதாளசாக்கடை பணிகளை விரைந்து முடித்து ரோடு போட்டு தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
2,428,530
2019-12-07T05:29:00+05:30
தமிழகம்
நக்சல் தீபக் காவல் நீட்டிப்பு
கோவை:நக்சல்வாதி தீபக்கின் நீதிமன்ற காவல், டிச., 20 வரை நீட்டிக்கப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில், தண்டர் போல்ட் போலீசாரால் நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுகொல்லப்பட்டனர். தப்பிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக்,32, ஆனைகட்டி மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.ஒடிசாவில், அதிரடி போலீசை கொன்ற வழக்கில் விசாரணை நடத்த, அந்த மாநில போலீசார், கடந்த 23 ம் தேதி, பி.டி., வாரன்டில் தீபக்கை அழைத்து சென்றனர்.கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று வரை காவல்நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தீபக்கை ஒடிசா போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரவில்லை. ஆஜர்படுத்த முடியாத காரணம் குறித்து மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, டிச., 20 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
2,428,532
2019-12-07T05:30:00+05:30
தமிழகம்
பள்ளி வேன் நடுவழியில் பஞ்சர்: உதவிய காவலருக்கு பாராட்டு
வெள்ளகோவில்:நடுவழியில், பள்ளி வேன் பஞ்சரானதால், டயரைக் கழற்றி மாற்ற, உடனடியாக உதவிய காவலருக்கு, பாராட்டு குவிகிறது.திருப்பூர் மாவட்டம், மூலனூர் அடுத்த போளரை பகுதியில், கலைக்கோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உள்ளது. இந்தப் பள்ளி வேன், 35 பள்ளி மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு நேற்றுமுன்தினம் மாலை, ரெட்டாரவலசை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பெரமியம் பாலம் அருகே, வேனின் இடது பக்க டயர், திடீரென பஞ்சர் ஆனது.டிரைவர் பழனிசாமி, 50, வேனை ஓரமாக நிறுத்தி, டயரைக் கழற்றிக்கொண்டிருந்தார். டிரைவர், டயரைக் கழற்றுவதற்குத் திணறினார். இதைப் பார்த்த, அந்த வழியாக வந்த மூலனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர் ஆனந்த், 28, அவரே முன்வந்து, டயரைக் கழற்றி, மாற்றுவதற்கு உதவினார். இதையடுத்து, உடனடியாக, பள்ளி வேன் புறப்பட முடிந்தது.இந்த வீடியோ, சமூக வலைதளங்களில், வைரலாக பரவியது. காவலர் ஆனந்த்துக்கு, பொதுமக்கள் பாராட்டு குவிகிறது.
2,428,533
2019-12-07T05:31:00+05:30
தமிழகம்
யானைகள் புத்துணர்வு முகாம் அரசின் உத்தரவுக்கு காத்திருப்பு 
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசின் தேதி அறிவிப்புக்காக, அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மேட்டுப்பாளையத்தில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.முகாமில், கோவில்கள், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு, புத்துணர்வு அளிக்கும் பயிற்சியும், சத்தான உணவு வகைகளும் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு, முகாம் நடத்த மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம், பாகன்கள் தங்குவதற்கு கூடாரங்கள், யானைகளுக்கும், பாகன்களுக்கு உணவு சமைக்க சமையல் கூடம், பாகன்கள் ஓய்வு எடுக்கவும், கால்நடை மருத்துவ குழுவினர் தங்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தங்கவும் தகரத்தால் தனித்தனியாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.முகாமுக்குள் வேறு எந்த வனவிலங்குகளும் வராமல் இருக்க, சுற்றியும் சோலார் மின் வேலி அமைக்கும் பணிகளும், மின் விளைக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.முகாம் நடத்த தமிழக அரசின் தேதி அறிவிப்புக்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
2,428,534
2019-12-07T05:31:00+05:30
தமிழகம்
சொத்து வரி வசூல் சிக்கல்: பேரூராட்சிக்கு நிதிச்சுமை
அவிநாசி:பேரூராட்சிகளில், சொத்து வரி வசூல் நிறுத்தப்பட்டுள்ளதால், நிதிச்சுமை ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கடந்தாண்டு, குடியிருப்பு கட்டடங்களுக்கு, 50 சதவீதம், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் தரப்பில், எதிர்ப்பு கிளம்பியது.'உள்ளாட்சி நிர்வாகங்களின் நிதிச்சுமையை ஈடுசெய்ய வேறு வழியில்லை' என, அரசு தெளிவுப்படுத்தியது.இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், உயர்த்தப்பட்ட தொகையை வசூலிக்காமல், முந்தைய கட்டணத்தையே வசூலிக்கவும், சொத்து வரி மறு சீராய்வு செய்யும் வரை, வரி வசூலை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டது.இணைய தளத்தில், பழைய சொத்து வரியை உள்ளீடு செய்தபின், தற்போது, சொத்து வரி வசூலிக்கும் பணியை, நகராட்சிகள் துவக்கியிருக்கின்றன. ஆனால், பேரூராட்சிகளில், இதுதொடர்பான இணையதள ஆன்லைன் செயல்பாடு, மாநில அளவில் ஒசூரை மையமாக கொண்டு செயல்படுகிறது. இதனால், பழைய வரியை உள்ளீடு செய்வதில் தாமதமாவதால், வசூல் பணியும் தாமதமாகியுள்ளது. பேரூராட்சிகளின் முக்கிய வருவாய் ஆதாரமே, சொத்து வரி மூலம் கிடைக்கும் வருமானம் தான். ஊழியர்களுக்கு சம்பளம் உட்பட பல அத்தியாவசிய தேவைகளுக்கான நிதி ஆதாரம், சொத்து வரி மூலமே திரட்டப்படுகிறது. 'வசூல் துவங்கப்படாததால், அடுத்த நிதியாண்டில், நிதிச்சுமை ஏற்படும் வாய்ப்புள்ளது' என்கின்றனர், பேரூராட்சி ஊழியர்கள்.
2,428,538
2019-12-07T05:34:00+05:30
தமிழகம்
பாதை கேட்டு கிராம மக்கள் முற்றுகை
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டின் இருபுறமும் பெரிய கண்மாய் ஒரு பகுதியில் குடிமராமத்து பணி செய்ய ஆர்.டி.ஒ.,அனுமதி வழங்கினார். பாதையும் அமைக்கப் பட்டது. பொதுபணிதுறை அதிகாரிகள் பாதையை அகற்ற வந்தனர்.அவர்களை திருப்பி அனுப்பிய சுப்புராஜ் நகர், கீரை கணேசன் நகர் பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பொதுமக்கள், 'பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக 1 கி.மீ., துாரம் சுற்றி செல்கிறோம். புதிய பாதை வசதியாக உள்ளது. அதிகாரிகள் இதை அகற்ற வருகின்றனர். கண்மாயில் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை அகற்றுவதை விட்டு பாதையை அகற்ற நினைக்கின்றனர்,'என்றனர்.அதிகாரிகள், 'கண்மாயில் பாதை அமைப்பது தவறு. எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும். கண்மாயில் மேம்பாலம் கட்டி தான் பாதை அமைக்க வேண்டும். எங்களிடம் கேட்காமல் ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் குடிமராமத்து பணி செய்ய உத்தரவு கொடுத்து விட்டனர்,' என்றனர்.அதிகாரிகளின் குளறுபடியால் பொதுமக்கள்தான் பாதைக்காக போராடும் நிலை உள்ளது.
2,428,539
2019-12-07T05:36:00+05:30
தமிழகம்
உண்டியல் பணம் கொள்ளை
ராஜபாளையம்:ராஜபாளையம் மதுரை ரோட்டில் அறநிலையத்துறை பாத்தியப்பட்ட ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இதை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் கடந்த 2015ல் புதுப்பித்து கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்டார். தினமும் பூஜைகள் நடைபெற்று வருவதுடன் ஆயிரக்கணக்கானோர் வழிபாடுசெய்து வருகின்றனர். இங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடுபோயிருந்தது. கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
2,428,540
2019-12-07T05:37:00+05:30
தமிழகம்
வழிப்பறி திருடர்கள் இருவர் கைது
விருதுநகர்:எட்டூர்வட்டத்தில் 6 மாதங்ளுக்கு முன் டூவீலரில் வந்த பெண் மீது விபத்தை ஏற்படுத்திய மர்ம நபர்கள் 5 பவுன் நகையை திருடினர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சிவகாசி செவலுாரை சேர்ந்த சக்தீஸ்வரன் 19, சிறுவன் என இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது.
2,428,541
2019-12-07T05:38:00+05:30
தமிழகம்
கால்களை நீட்டி ஓய்வெடுக்க 'சேர்'
சிவகாசி:யாராக இருந்தாலும் எந்த வேலை செய்தாலும் வேலை முடிந்த பின் சற்று ஓய்வெடுப்பது வழக்கம். அவரவர் வசதிக்கேற்ப வீட்டில் அலுவலகத்திலுள்ள பிளாஸ்டிக் சேர், சோபாவில் உட்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பர். உடல் அசதியால் அவ்வாறு ஓய்வு எடுத்தால்தான் அடுத்த வேலையை தொடர முடியும். எல்லோரது வீட்டிலும் பிளாஸ்டிக் சேர், சோபா இருக்கும். சேரில் உட்கார்ந்தால் கால்களை நீட்டி உட்கார முடியாது. கால்களை தரையில் ஊன்றிதான் உட்கார முடியும். ஆனால் அமர்ந்து ஓய்வெடுக்கலாம். அதே நேரத்தில் சேரில் அமர்ந்து கால்களை தரையில் படுமாறு நீட்டினால் இன்னும் சுகமாக இருக்கும். அலுப்பும் தெரியாது. அந்த வகையில் சிவகாசி காமராஜர் பூங்கா அருகே உள்ள பாரத் ஏஜென்சீஸில் உட்கார்ந்து , தரையில் கால்களை நீட்டி ஓய்வெடுக்கும் வகையில் புது வகையான பிளாஸ்டிக் சேர் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் அமர்ந்தால் சொகுசாகவும் , வசதியாகவும் உள்ளது. சேரில் குஷன் அமைத்தும் உட்காரலாம். பெரியவர்கள், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. பாரத் ஏஜென்ஸி உரிமையாளர் தினேஷ் ,'' சேரில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் கால்களை தரையில் நீட்டி சேரில் உட்காரும் வகையிலான சேர்கள் தற்போது இங்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சேர் உட்காருவதற்கு வசதியாக இருக்கும். வெறும் சேரிலும் அமரலாம். பெரியவர்கள், குழந்தைகள் ஓய்வெடுக்க நன்றாக இருக்கும்,''என்றார்.தொடர்புக்கு 94435 44189.
2,428,542
2019-12-07T05:44:00+05:30
தமிழகம்
மெய்சிலிர்க்க வைக்கும் ஓலைச்சுவடி :தலைமுறையினர் அறிய அரும் முயற்சி
விருதுநகர்: ஓலைச் சுவடிகள் தமிழர்களின் பாரம்பரியமாகும். சங்க காலத்திலிருந்து காகிதத்தில் அச்சு கோர்க்கும் காலம் வரும் வரை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஓலைச் சுவடியில் தான் பொறிக்கப்பட்டு வந்தன. தமிழின் தொன்மையை நாம் ஓலைச்சுவடியை கொண்டே அறிய முடியும். இந்த ஓலைச் சுவடிகள் நுாற்றாண்டு தோறும் புதுப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம், அகத்தியர் மருத்துவ குறிப்புகள், 18 சித்தர்களின் மருத்துவ குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொகுப்புகள் ஓலைச்சுவடிகளில் உருவாக்கப்பட்டவை தான். ஒரு ஓலைச்சுவடியை 700 ஆண்டுகள் வரை தான் பராமரிக்க முடியும். பின் மீண்டும் புதுப்பிக்கப் பட்டு படிவோலையாக மாற்றப்படுகிறது. தற்போது நம் படிப்பவை அனைத்தும் படிவோலை தான். மாணிக்கவாசகர் பாட இறைவனே எழுதிய ஓலைச்சுவடி தான் மிகவும் பழமையான ஓலையாக கருதப்படுகிறது.இதை இன்னும் புதுச்சேரி அம்பலத்தடிகள் மடத்தில் பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஒவ்வொரு சிவராத்திரிக்கும் பூஜிக்கப்படுகிறது. தொன்மையான பல ஓலைச்சுவடிகள் இன்றும் தஞ்சை பல்கலை, சரஸ்வதி மஹாலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விரல்களை தண்ணீரில் தோய்த்து ஓலைச்சுவடியை இடமிருந்து வலமாக தேய்த்தால் ஓலைச்சுவடியை வாசிக்க இயலும். தொன்மை நடையில் வாசிப்பது மிகவும் கடினமான ஒன்று. இதை இக்கால இளைஞர்களுக்கு எடுத்து செல்லும் வகையில விருதுநகர் வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி செமஸ்டர் விடுமுறைகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்துகிறது. தமிழ்த் துறை சார்பில் நடத்தப்படும் இந்த வகுப்பிற்கு ஆண்டுதோறும் ராஜபாளையத்தை சேர்ந்த ஓய்வு தொல்லியல் உதவி இயக்குனர் சந்திரவாணன் பாடம் நடத்துகிறார். அதே போன்று இந்தாண்டும் அகத்தியர், தேரையரின் மருத்துவ குறிப்புகளை மாணவிகளுக்கு எளிதில் விளக்கியும், ஓலைச்சுவடியை வாசிக்கவும் கற்று கொடுத்தார்.பெருமை தரும் ஓலைச்சுவடிகள்ஓலைச்சுவடிகள் குறித்து படிப்போரை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலையில் ஊக்க தொகை அளிக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெறவும் வழிவகை செய்யப்படுகிறது. ஓலைச்சுவடிகளின் தொன்மை தான் நமக்கு பெருமை. பள்ளுவகை, கம்பராமாயணம், திருக்குறள் ஆகியவற்றில் இருந்து பல புராஜெக்டுகள் செய்துள்ளோம்.- மஞ்சுளா, 3ம் ஆண்டு மாணவி, தமிழ்த்துறைமெய்சிலிர்க்க வைக்கிறது.எவ்வாறு ஓலைச்சுவடிகளில் உள்ள தமிழ் எழுத்துக்களை வாசிக்க வேண்டும் என கற்று கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமிழர்களின் வைத்திய முறை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் ஓலைச்சுவடிகளை அனைத்து மக்களும் அறிந்திட வேண்டும். முன்னோர்களின் வாழ்க்கை முறை அவ்வளவு அர்த்தமுள்ளதாக உள்ளது.- -யுவபிரியா, 3ம் ஆண்டு மாணவி, தமிழ்த்துறை.அடுத்த தலைமுறைக்கு வேண்டும்சுவடியை பதிப்பித்தல் எனும் தொழில் உள்ளது. அது நம்மில் பலருக்கு தெரியாது. சுவடியை வாசிக்க தெரிந்தால் மட்டுமே அதை மீட்டுருவாக்கம் செய்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரம் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும்.- சந்திரவாணன், ஓய்வு தொல்லியல் துறை அதிகாரி, ராஜபாளையம்ஓலைச்சுவடிக்கு தனி வகுப்புஎங்கள் கல்லுாரியில் 400 ஓலைச்சுவடிகள் உள்ளன. புராணங்கள், இலக்கணங்கள், வைத்திய முறை குறித்து ஓலைச்சுவடிகள் அதிகமாக உள்ளன. நாங்கள் ஓலைச்சுவடி குறித்த படிப்பை சான்றிதழ் படிப்பாக வைத்துள்ளோம். இப்பயிற்சி வகுப்புகளால் தொல்லியல் ஆராய்ச்சி துறையில் ஓலைச்சுவடிகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணியிடங்களில் சேரும் வழிமுறை தெரியும்.- வேல்மயில், இணைப்பேராசிரியர், வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி.
2,428,543
2019-12-07T05:45:00+05:30
தமிழகம்
கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சிவகாசி:சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் போட்டி தேர்வுகள் மையம் சார்பில் இந்திய குடிமை பணிகள் தேர்வில் பங்கேற்க உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மையம் ஒருங்கிணைப்பாளர் மூவேந்தன் வரவேற்றார். கல்லுாரி தாளாளர் அபிரூபன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். சென்னை வருமான வரி இணை ஆணையர் ரெங்கராஜன், சென்னை வருமான வரி ஓய்வு அலுவலர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 200க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி ஒருங்கிணைப்பாளர் காளிராஜன் நன்றி கூறினார்.
2,428,550
2019-12-07T05:53:00+05:30
தமிழகம்
நோய்களை விரட்டும் 'அர்க்'
விருதுநகர்:ஒரு காலத்தில் வீடுகளில் மாடுகள் இருப்பது கவுரவம் என்ற நிலை இயந்திரங்களின் வருகையால் முற்றிலும் மாறி இன்றைய தொழுவங்களில் டிராக்டர்கள் தான் முழுவதுமாக இடம் பிடித்துள்ளன. இருந்தாலும் மண் மீதும், மாடுகள் மீதும் உள்ள பாரம்பரிய பிணைப்பை மறக்க முடியாத சிலர் இன்றைக்கும் நாட்டு மாடுகளை பராமரித்து வருகின்றனர். அதில் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சங்கர் கணேஷூம் ஒருவர். விருதுநகரில் நாட்டு மாடு வளர்ப்பில் தீவிரமாக உள்ள இவர் நாட்டு மாட்டின் பயன்பாட்டை ஒரு படிக்கு மேலே 'அர்க்' போன்ற மதிப்பு கூட்டு பொருட்களாகவும் தயாரித்து வருகிறார். 'அர்க்' குறித்து அவர் பகிர்ந்து கொண்ட அரிய தகவல்கள் இதோ...''நாட்டு பசு மாடுகளின் கோமியம், சாணத்திலிருந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வளிக்கும் மருத்துவ குணம் உள்ளது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டு பசுவின் சாணம், கோமியம், பால், நெய், வெண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் 'பஞ்சகாவ்யம்' தான் இன்றைய இயற்கை விவசாயத்தின் உயிர்நாடியாக உள்ளது. காய்ச்சி வடித்த கோமியத்தை நாள்தோறும் இருவேளையும் குடித்தால் சகல நோய்களுக்கும் உடலில் இடமிருக்காது. நாட்டு பசு மாடுகள் இயற்கையான சூழலில் தொடர் மேய்ச்சலில் இருக்கும். அந்த மாடுகளிடம் இருந்து காலையில் கோமியம் பிடித்து பானையில் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். அது கொதித்து ஆவியாக மேலே எழும்.
2,428,552
2019-12-07T05:55:00+05:30
தமிழகம்
உதவிகள் வழங்கும் விழா
சிவகாசி:சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கத்தின் ஆளுநர் வருகை தினத்தையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழில் நகர் அரிமா சங்கம் தலைவர் கூடலிங்கம் தலைமைவகித்தார்.செயலாளர் கவுரிசங்கர் வரவேற்றார்.ஆளுநர் முருகன்,க்ஷ சுரேந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பொருளாளர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.
2,428,554
2019-12-07T06:22:00+05:30
இந்தியா
படேல்சிலையை பார்வையிடும் 15ஆயிரம் பேர்
புதுடில்லி: குஜராத் மாநிலம், சர்தார் சரோவர் அணை அருகே, 182 மீட்டர் உயரம் கொண்ட, சர்தார் வல்லபபாய் படேலின் சிலை, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு, ஒற்றுமை சிலை என, பெயரிடப்பட்டது. இந்த சிலையை, தினம்தோறும், 15 ஆயிரம் சுற்றுலா பயணியர் பார்வையிட வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை, தினமும், 10 ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர். இது, அந்த சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
2,428,555
2019-12-07T06:27:00+05:30
தமிழகம்
பெட்ரோல் விலை மாற்றம் இல்லை, டீசல் விலை அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (டிச,.07) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.83 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2,428,556
2019-12-07T06:28:00+05:30
தமிழகம்
நாய் கடித்து 23 பேர் காயம்
சோழவந்தான்,: சோழவந்தானில் வெறிநாய் ஒன்று ரோட்டில் சென்றோரை விரட்டி கடித்தது. இதில் செல்வம் மகன் அஜய் 4, விளாம்பட்டி அருண்பாண்டி 16,(பள்ளி மாணவர்), சேதுபதி 68, தென்கரை, முள்ளிப்பள்ளம், காடுபட்டி, குருவித்துறையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 23 பேர் காயமுற்றனர். அவர்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
2,428,557
2019-12-07T06:37:00+05:30
தமிழகம்
சென்னை: பல்வேறு பகுதிகளில் மழை
சென்னை: சென்னையில் இன்று (7 ம் தேதி) காலை நேரத்தில் மழை பெய்தது.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும் மதுரையில் நேற்று நள்ளிரவில் மழை பெய்தது.
2,428,558
2019-12-07T06:38:00+05:30
இந்தியா
அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு
புதுடில்லி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான கால அளவை உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி நீட்டித்து ஊழலில் ஈடுபட்ட புகாரில் சிக்கினார்.
2,428,559
2019-12-07T06:50:00+05:30
தமிழகம்
சபரிமலையில் புலி : ஊழியர்கள் பீதி
சபரிமலை : சபரிமலையில், புலி நடமாட்டம் உள்ளதால், பக்தர்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலையில், நேற்று அதிகாலை, தேவசம்போர்டு உணவகம் பின்புறம், பெய்லி பாலத்தை கடக்க முயன்ற இரண்டு போலீசார், அப்பகுதியில் புலி நிற்பதை பார்த்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கூடுதல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பட்டாசு வெடித்து புலியை, வனப்பகுதியினுள் விரட்டினர். எனினும், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே, பீதியை ஏற்படுத்தியுள்ளது.
2,428,560
2019-12-07T07:00:00+05:30
இந்தியா
ஜார்க்கண்டில் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது
ராஞ்சி: ஜார்க்கண்டில், இரண்டாம் கட்டமாக, 20 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று(டிச.,7) தேர்தல் துவங்கி நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 45.03 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 81 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக, நவ., 30ல், 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இன்று, இரண்டாம் கட்ட மாக, 20 தொகுதிகளில், ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில், மொத்தம், 47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவையொட்டி, மத்திய துணை ராணுவப் படை, போலீசார் உட்பட, 42 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2,428,561
2019-12-07T07:37:00+05:30
தமிழகம்
குழந்தையின் உயிரை காப்பாற்றிய டிரைவர்
திருப்பூர்: வெள்ளகோவிலில் இருந்து, ஒரு மணி நேரம் 10 நிமிடத்தில், மின்னல் வேகத்தில் சென்ற கோவை மருத்துவமனையை ஆம்புலன்ஸ் அடைந்ததால், மூன்று வயது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு குவிகிறது.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கள்ளாங்கட்டுவலசில் வசிப்பவர் சங்கீதா, 27. இவரது மகன் சந்தோஷ், 3. நேற்றுமுன்தினம் காலை முதல், காய்ச்சலால், அவதிப்பட்டு வந்த சந்தோஷ், வெள்ளகோவில் தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். திடீரென மாலை 6 மணி அளவில் சந்தோஷுக்கு, வலிப்பு வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ஆகாஷ், 21, என்பவரின் 'மின்னல்' என்ற பெயரிடப்பட்ட ஆம்புலன்ஸ்(ஆம்னி வாகனம்) மூலம் இரவு 7:00 மணியளவில், குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.வெள்ளகோவிலில் இருந்து கோவைக்கு 90 கி.மீ., தூரம். ஆம்புலன்ஸ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை 1 மணி நேரம், 10 நிமிடத்தில், அதாவது, இரவு 8:10 மணியளவில், அடைந்தது. உடனடியாக,குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சந்தோஷூக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, குழந்தை பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த வழித்தடத்தில், பஸ்சில் பயணம் செய்தால், சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.டிரைவர் ஆகாஷ் கூறுகையில், '''ஆம்புலன்சில் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்து, சைரன் சத்தத்துடன், மின்னல் வேகத்தில் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றேன். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. சாலை, போக்குவரத்து நெருக்கடியுடன் தான் இருந்தது. சிரமப்பட்டு கோவையை அடைந்தாலும், குழந்தை காப்பாற்றப்பட்டதால், நெகிழ்கிறேன்' என்றார்.குறுகிய நேரத்தில், குழந்தையை மருத்துவமனை கொண்டுசென்று சேர்த்து, உயிரைக் காப்பாற்றிய, ஆகாஷூக்கு, சமூக வலைதளங்களில், பொதுமக்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
2,428,562
2019-12-07T08:07:00+05:30
இந்தியா
வெளிநாட்டு வெங்காயம் ஜனவரியில் இறக்குமதி
புதுடில்லி : ''வரும் ஜனவரியில், வெளிநாட்டு வெங்காயம் இறக்குமதி ஆகும்,'' என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், தாதாராவ், ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:பருவம் தவறிய மழை மற்றும் தொடர்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை வினியோகித்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன், பொதுத் துறையைச் சேர்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும், ஜனவரியில் வெங்காயம் இறக்குமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
2,428,563
2019-12-07T08:25:00+05:30
தமிழகம்
புகார் பெட்டி - சேலம்
ஜல்லி கொட்டியும் சாலை போடல! சேலம், தாதகாப்பட்டி, அம்பாள் ஏரி ரோடு, 1, 2, 3, 4வது குறுக்கு சாலைகளில், ஜல்லி கொட்டப்பட்டது. ஆனால், சாலை போடவில்லை. குழந்தைகள், முதியோர் தடுமாறி விழுகின்றனர். இருசக்கர வாகனங்கள் சறுக்கி, மக்கள் விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உயிரிழப்பு ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.- எஸ்.சண்முகம், தாதகாப்பட்டி.முட்செடி புதரால் பாம்புகள் உலா: கனககிரி ஊராட்சி, வேலாயுதசாமி கோவில் அடிவார பகுதியிலிருந்து, மாரியம்மன் கோவில் வரை, சாலை இருபுறமும் முட்செடி வளர்ந்து, புதராக மாறியுள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாதசாரிகள் அச்சத்துடன் செல்லும் அவலம் உள்ளது. குறிப்பாக, இரவில் அந்த வழியாக செல்லவே, பெண்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய பலனில்லை. - எம்.விஜயா, கனககிரி.
2,428,564
2019-12-07T08:25:00+05:30
தமிழகம்
கர்ப்பிணிகளுக்கு பஞ்சமுட்டி சத்து கஞ்சி
மேட்டூர்: மேட்டூர், சந்தைதானம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ அலுவலர் அபிநயா ஆர்த்தி தலைமையில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 57 கர்ப்பிணி பெண்களுக்கு, நேற்று வளைகாப்பு நடந்தது. அதில், ஐந்து வகை உணவு பரிமாறப்பட்டது. தொடர்ந்து, சித்தா மருத்துவமனை சார்பில், உளுந்து, பச்சைபயறு, கடலைபருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசி மூலம் தயாரித்த, பஞ்சமுட்டி சத்து கஞ்சி வழங்கப்பட்டது. இதில், மருத்துவர் நித்யா, ஆயுஷ் மருத்துவ அலுவலர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2,428,565
2019-12-07T08:25:00+05:30
தமிழகம்
வனப்பகுதியில் மழைநீர் குட்டை
வாழப்பாடி: வாழப்பாடி வனச்சரகம், குறிச்சி காப்புக்காட்டில், நீரோடை, சுனை, பாலி உள்ளிட்ட நீர்நிலைகள், அடிக்கடி வறண்டு போய்விடுவதால், தண்ணீரை தேடி விலங்குகள், ஊருக்குள் படையெடுக்கின்றன. அத்துடன், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், விலங்குகளுக்கு பயனாக, மழைநீர் சேகரிப்பு குட்டை அமைக்க, விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி, வனத்துறை சார்பில், குறிச்சி, எருமைச்சாட்டுக்கோம்பை வனப்பகுதியில், 5 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக குட்டை அமைக்கப்பட்டுள்ளது.
2,428,566
2019-12-07T08:26:00+05:30
தமிழகம்
500 கிலோ மின் கழிவு அனுப்பிவைப்பு
ஆத்தூர்: ஆத்தூர் நகர் பகுதியிலுள்ள வீடுகள், கடைகளில், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், தினமும் மட்கும், மட்காதவை என, தரம்பிரித்து வாங்குகின்றனர். மட்காத மின் கழிவு, வீடுகளில் உள்ள அபாய கழிவு தனியாக பிரித்து, இருப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், மின் கழிவை அழிக்க, அங்கீகாரம் பெற்றுள்ள, சென்னை, லீலா டிரேடர்ஸ் நிறுவனத்துடன், ஆத்தூர் நகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், ஆத்தூரில் சேகரித்து வைத்திருந்த, 500 கிலோ மின் கழிவு, வீட்டில் உருவாகும் அபாய கழிவை, நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி, நேற்று முன்தினம், லாரி மூலம், தனியார் நிறுவனத்துக்கு அனுப்பிவைத்தார்.
2,428,567
2019-12-07T08:26:00+05:30
தமிழகம்
அம்பேத்கர் நினைவுதினம்: அமைப்பினர்கள் அஞ்சலி
சேலம்: அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பல அமைப்பினர், அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தøவாசல் பஸ் ஸ்டாண்டில், அண்ணல் அம்பேத்கர் சிந்தனையாளர்கள் கூட்டமைப்பினர், நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். அதில், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அவர் சந்தித்த சோதனை, நிகழ்த்திய சாதனை குறித்து, அமைப்பினர் பேசினர். மேட்டூர், சின்னபார்க் அருகே, சி.ஐ.டி.யு.,வினர் அஞ்சலி செலுத்தினர். ஏற்காடு, ஒண்டிக்கடையில், திராவிடர் விடுதலை கழகம், அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கர் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சில நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். சங்ககிரி, மோரூரில், இளைஞர் மன்றம் சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில், மேட்டுப்பாளையத்தில், சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த, 17 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2,428,568
2019-12-07T08:26:00+05:30
தமிழகம்
அடிப்படை வசதியை நிறைவேற்றுங்க... கறுப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம்
மேச்சேரி: அடிப்படை வசதியை நிறைவேற்றக்கோரி, வீடுகளில் கறுப்பு கொடி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தினர்.மேச்சேரி, மல்லிகுந்தம் ஊராட்சி, எட்டாவது வார்டு, ஆதி திராவிடர் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுப்பதோடு, பொது சுகாதார வளாகம் கட்டித்தர, மக்கள் வலியுறுத்தினர். எனினும், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள், வீடுகள், மின் கம்பங்களில், நேற்று கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேச்சேரி ஆர்.ஐ., ஜெயமணி, வி.ஏ.ஓ., கல்பனா, ஒன்றிய அலுவலர்கள், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். அதேநேரம், கோரிக்கையை நிறைவேற்றும்வரை, கொடிகளை அகற்றமாட்டோம் என, மக்கள் தெரிவித்து விட்டனர்.
2,428,569
2019-12-07T08:27:00+05:30
தமிழகம்
தமிழக முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் 1,100 பேர் ஐக்கியம்
ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு, கருமந்துறை, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு பகுதிகளைச் சேர்ந்த, மா.கம்யூ., கட்சியினர், கருமந்துறை, வடக்குநாடு ஊராட்சி முன்னாள் தலைவர் பூங்கொடி பழனிசாமி, தி.மு.க., - அ.ம.மு.க., - கம்யூ., - வி.சி., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்டோர், அக்கட்சிகளிலிருந்து விலகிவிட்டனர். அதேபோல், இடைப்பாடி, சின்னசோரகையிலிருந்து, தி.மு.க., - அ.ம.மு.க., கட்சியினர், 200 பேர், வீரபாண்டி ஒன்றியத்திலிருந்து, தி.மு.க.,வைச் சேர்ந்த, 300 பேர், அக்கட்சிகளிலிருந்து விலகிவிட்டனர். அவர்கள் அனைவரும், தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில், நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர், மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன், எம்.பி., சந்திர சேகரன், எம்.எல்.ஏ.,க்களான, மேட்டூர் செம்மலை, ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஏற்காடு சித்ரா, வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2,428,570
2019-12-07T08:28:00+05:30
தமிழகம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி
கெங்கவல்லி: சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கெங்கவல்லி ஒன்றிய தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் குறித்து, மூன்று சுற்றுகளாக பயிற்சி நடக்கிறது. நேற்று நடந்த பயிற்சியில், 50 ஆசிரியர் பங்கேற்றனர். அவர்களுக்கு, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கலைவாணன், ஆங்கில பேச்சுத் திறனை வளர்த்தல் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில், கெங்கவல்லி கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணிமுத்து, கருத்தாளர்கள் ரோசலின்ராணி, வசந்தி, சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
2,428,571
2019-12-07T08:28:00+05:30
தமிழகம்
அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்
உயரம் குறைந்த சுவரால் ஆபத்து: மல்லூர் - பனமரத்துப்பட்டி சாலையை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. வி.ஐ.பி., சிட்டி அருகே, ஒருபுறம் திறந்தவெளி கிணறு, எதிரே பனைமரங்கள் உள்ளன. சாலையோரம், கிணறு அருகே, மிக குறைந்த உயரத்தில், தடுப்புச்சுவர் உள்ளது. அப்பகுதியில், சாலை குறுகலாக உள்ளதால், வாகனங்கள், கிணற்றில் பல்டி அடிக்கும் அபாயமுள்ளது. தெருவிளக்கும் இல்லாததால், இரவில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளதால், உயரமாக தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.மண் அரிப்பால் சிதறிய தார்ச்சாலை: சேலம், செவ்வாய்ப்பேட்டை, மூலப்பிள்ளையார் கோவில் சாலை - கந்தம்பட்டி சாலை சந்திப்பு இடைப்பட்ட பகுதியில் கட்டப்பட்ட தரைப்பால பக்கவாட்டு தடுப்புச்சுவர், இடிந்து, முழுமையாக சேதமாகிவிட்டது. அதன் வழியே, மழைநீருடன், கழிவுநீர் வெளியேறி, மண் அரிப்பு ஏற்பட்டதால், 5 மீட்டர் தூரத்துக்கு, சாலை படுமோசமாகிவிட்டது. தரைப்பாலமும் துண்டிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருவதால், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்: தலைவாசல், மாரியம்மன் கோவில் பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு, வசிஷ்ட நதிக்கரையோரம், சுகாதார வளாகம் உள்ளது. ஆனால், தண்ணீர் வசதி இல்லாததால், பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் கரைகளில், திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், ஆற்று நீர் மாசடைவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால், சுகாதார வளாகத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தினால், மக்களுக்கு பயனாக இருக்கும்.மைதானத்தில் புதர்; இளைஞர்கள் அச்சம்: சங்ககிரி, அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில், இளைஞர் விளையாட்டு, பொழுதுபோக்கு மையம் உள்ளது. அங்கு, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், காலை, மாலையில் பயிற்சி பெற்று வருகின்றனர். சில மாதமாக, மைதானம் பராமரிப்பின்றி, ஆங்காங்கே செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், இளைஞர்கள் அச்சப்படுவதால், மைதானத்தை சீரமைக்க வேண்டும்.குடிநீர் தொட்டியை சீரமைப்பது அவசியம்: சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, பள்ளக்காடு குடித்தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்கு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன், மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைத்து, பயன்பாட்டில் உள்ளது. ஆனால், தொட்டியின் அடித்தளம், தூண்களில் கான்கிரீட் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், குடிநீர் கசிந்து வீணாகி வருவதால், தொட்டியை சீரமைக்கக்கோரி, அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.
2,428,572
2019-12-07T08:29:00+05:30
தமிழகம்
எதுவானாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க முதல்வர் அறிவுரை
ஓமலூர்: எதுவானாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க, தமிழக முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூர், அ.தி.மு.க., புறநகர் கட்சி அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், நிர்வாகிகளுடன், ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில், உள்ளாட்சி தேர்தல் குறித்து, எதுவானாலும் எதிர்கொள்ள, நாம் தயாராக இருக்கவேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அடுத்தமுறை வழங்கப்படும். உங்களோடு இணைந்துதான், மற்றவர்களும் செயல்படவுள்ளனர். கூட்டணி கட்சியினரிடம் இணக்கத்தோடு செயல்பட்டு, அ.தி.மு.க., - கூட்டணி கட்சியினர் வெற்றி பெற உழைக்கவேண்டும். வெற்றி பெற்றால்தான், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடியும். அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என, முதல்வர் அறிவுறுத்தியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், செம்மலை, வெற்றிவேல், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
2,428,573
2019-12-07T08:29:00+05:30
தமிழகம்
மேச்சேரி வாரச்சந்தை ரூ.1 கோடியில் விரைவில் சீரமைப்பு
மேச்சேரி: மேச்சேரி வாரச்சந்தை, ஒரு கோடி ரூபாயில் சீரமைக்கப்படவுள்ளது. மேச்சேரி பேரூராட்சி பகுதியில், 2 ஏக்கர் நிலத்தில், புதன்தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. அங்கு, 200க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், கடை போட்டு காய்கறி, பழம், உணவு தனியங்களை விற்கின்றனர். ஆனால், மேற்கூரை இல்லாததால், வியாபாரிகள் சாக்குகளை கட்டி, அதன் கீழ், பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். மழைக்காலங்களில் பொருட்கள் நனைந்து சேதமாவதால், வியாபாரிகள் தவித்தனர். இதை தடுக்க, 2019 - 20ம் ஆண்டு மூலதன மானிய நிதி, ஒரு கோடி ரூபாயில், சந்தையில் ஏழு இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நீண்ட மேடை கட்டி சீரமைக்க, பேரூராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பூமிபூஜை விழா, கடந்த வாரம் நடந்த நிலையில், சந்தை சீரமைப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளதாக, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.