text
stringlengths 16
178
|
---|
அஞ்சலிவந்தனம் ஆருக்கும் நன்மை.
|
அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.
|
அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
|
அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடையாது.
|
அஞ்சி ஆண்மை செய்யவேணும்.
|
அஞ்சி நடக்கிறவளுக்குக் காலமல்ல.
|
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
|
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல், அறுபதிற்குமேல் கொஞ்சினானாம்.
|
அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?
|
அஞ்சினவனைக் குஞ்சும் வெருட்டும்.
|
அஞ்சினவனைப் பேய் அடிக்கும்.
|
அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்.
|
அஞ்சினாரைக் கெஞ்சுவிக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.
|
அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
|
அஞ்சு குஞ்சும் கறியாமோ, அறியாப் பெண்ணும் பெண்டாமோ?
|
அஞ்சுகதவும் சாத்தியிருக்க, ஆமுடையான் வாயிலே பேணவளார்?
|
அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன், திரட்டிக்குக் கொண்டுவந்தானாம்.
|
அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை.
|
அஞ்சு பணம் கொடுத்தாலும், அத்தனை ஆத்திரம் ஆகாது.
|
அஞ்சுபணங் கொடுத்துத் கஞ்சித்தண்ணீர் குடிப்பானேன்?
|
அஞ்சு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்.
|
அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே.
|
அஞ்சுரு ஆணியில்லாத்தேர் அசைவதரிது.
|
அஞ்சுபொன்னும் வாங்கார் அரைப்பணமே போதுமென்பார்.
|
அஞ்சும் மூன்றும் உண்டானால், அறியாச் இறுக்கியும் கறியாக்குவாள். (பெண்ணாவாள்)
|
அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக் கொண்டு வந்தாற்போல் வலக்காரமாய்ப் பேசுகிறாய்.
|
அஞ்சு வயதுப் பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்கவேண்டும்.
|
அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
|
அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம், ஐங்கல அரிச ஒரு கவளம்.
|
அஞ்செழுத்தும் பாவனையும் அப்பனைப்போல் (அவனைப்போல்) இருக்கிறது.
|
அடக்கத்துப் பெண்ணுக்கு அழகேன்?
|
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
|
அடக்கம் ஆயிரம்பொன் தரும்.
|
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதார் கல்லார்.
|
அடக்குவாரற்ற கழுக்காணி.
|
அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான்.
|
அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும்.
|
அடங்காப் பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி.
|
அடங்காப்பிடாரியைப் பெண்டுவைத்துக் கொண்டது போல்.
|
அடங்காப் பெண்சாதியால் அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு.
|
அடங்காமாட்டுக்கு அரசன் மூங்கில் தடி.
|
அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல், அடங்காப்பிட பிடிக்கலாகாது.
|
அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு.
|
அடா என்பான், வெளியே புறப்படான்.
|
அடாது செய்தவன் படாது படுவான்.
|
அடி அதிரசம் (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை.
|
அடி உதவுகிறதுபோல அண்ணன் தம்பி உதவார்.
|
அடி என்கப் பெண்சாதியில்லை, அஷ்ட புத்திரவெகு பாக்கிய நமஸ்து
|
அடி என்கிற மந்திரியுமில்லை பிடி என்கிற ராஜனுமில்லை.
|
அடி ஒட்டலே கரணம் போடப்பார்க்கிறான்.
|
அடி ஒட்டையா யிருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியதுதானே
|
அடிக்க அடிக்கப் பந்து அதிக விசைகொள்ளும்
|
அடிக்காயிரம் பொன் கொடுக்கவேண்டும்.
|
அடிக்கிற காற்றுக்கும் பெய்கிற மழைக்கும் பயப்படு.
|
அடிக்கிற காற்று வெயிலுக்குப்பயப்படுமா?
|
அடிக்கும் ஒரு கை, அணைக்கும் ஒரு கை.
|
அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.
|
அடிக்கும் பிடிக்கும் சரி.
|
அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார்.
|
அடிச்சட்டிக்குன்ளே கரணம் போடலாமா?
|
அடித்த இடம் கண்டுபிடித்தழ ஆறு மாசம் செல்லும்.
|
அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.
|
அடித்தது ஆட்டம் பிடித்தது பெண்டு.
|
அடித்தாலும் புருஷன் புடைத்தாலும் புருஷன்.
|
அடித்துப் பழுத்ததும் பழமா?
|
அடித்துப் பால் புகட்டுகிறதா?
|
அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் செவ்வையாகா.
|
அடித்து விட்டவன் பின்னே போனாலும், பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது.
|
அடிநாக்கிலே நஞ்சும் நுனிநாக்கிலே அமிர்தமுமா?
|
அடி நொச்சி நுனி ஆமணக்கா?
|
அடிப்பானேன் பிடிப்பானேன் அடக்குகிற வழியில் அடக்குவோம்.
|
அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்
|
அடிமை படைத்தால் ஆள்வது கடன்.
|
அடியற்ற பனை போல் விழுந்தான்.
|
அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது.
|
அடியற்றால் நுனி விழாமலிருக்குமா?
|
அடியாத மாடு படியாது.
|
அடியிலுள்ளது நடுவுக்கும் முடிக்கும் உண்டு.
|
அடியும் நுனியும் தறித்த கட்டையபோல.
|
அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?
|
அடி யென்று அழைக்கப் பெண்டாட்டி, இல்லை, பிள்ளை எத்தனை பெண் எத்தனை என்கிறான்.
|
அடியைப்பிடிடா பாரதபட்டா.
|
அடி யொட்டி யல்லா மேற்கரணம் போடவேணும்?
|
அடிவானம் கறுத்தால், ஆண்டை வீடு வறுக்கும்.
|
அடிவண்டிக் கடாப்போலே.
|
அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல.
|
அடுக்களைக் இணற்றிலே அமுதம் எழுந்தாற்போல.
|
அடுக்களைக் குற்றம் திருப்பால் குழைந்தது, ஆமுடையான் குற்றம் பெண்ணாகப் பிறந்தது.
|
அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஒரு ஆணும் இருக்கிறதென்கிறான்.
|
அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது.
|
அடுக்களைப் பெண்களுக்கு அழகுவேண்டுமா?
|
அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
|
அடுக்குகிற வருத்தம் உடைக்கிறதுக்குத் தெரியாது.
|
அடுத்த கூரை வேவுங்கால் தன் கூரைக்கு மோசம்.
|
அடுத்ததன் தன்மை ஆன்மாவாகும்.
|
அடுத்தது காட்டும் பளிங்கதுபோல, (நெஞ்சில்) கடுத்தது காட்டும் முகம்.
|
அடுத்தவரை அகல விடலாகாது.
|
அடுத்தவனைக் கெடுக்கலாமா?
|
அடுத்தவன் வாழ்வைப் பகலே குடி கெடுப்பான்.
|
அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றாளென்று அம்மிக்குழவி யெடுத்துக் குத்தக்கொண்டாளாம்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.